» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சீர்மரபினர் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு: இணையதளம் தொடக்கம் - ஆட்சியர் தகவல்
செவ்வாய் 26, மே 2026 3:23:11 PM (IST)
சீர்மரபினர் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்தல், நலத்திட்ட உதவிகள் பெறுதலை எளிதாக்கும் வகையில் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.
சீர்மரபினர் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு கீழ்கண்ட நலத்திட்ட உதவிகள் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.
1. விபத்து ஈட்டுறுதி திட்டத்தின் கீழ் உதவித்தொகை
2. இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை
3. ஈமச்சடங்கு செலவிற்கான உதவித்தொகை
4. கல்வி உதவித்தொகை
5. திருமண உதவித்தொகை
6. மகப்பேறு உதவித்தொகை
7. மூக்குக்கண்ணாடி செலவுத்தொகை ஈடு செய்தல்
8. முதியோர் ஓய்வூதியம்
மேற்படி நலத்திட்ட உதவிகள் பெற 1) சீர்மரபினர் இனத்தைச் சார்ந்தவர்கள் 2) 18 வயது முதல் 60 வயது நிறைவு பெறாதவர்கள் 3) அமைப்பு சாரா நிறுவனங்களில் பணிபுரியும் குடும்பத்தில் ஒருவர் (அமைப்பு சாரா தொழில், நிலமற்ற விவசாய கூலி, உடலுழைப்பு தொழிலில் ஈடுபட்டுள்ள) இவ்வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து நலத்திட்ட உதவிகள் பெற தகுதி பெறுகின்றனர்.
மேற்படி. நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்தல், நலத்திட்ட உதவிகள் பெறுதலை எளிதாக்கும் வகையில் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இனி www.dncwb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்து, பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் விவரங்கள் அறிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி வளர்ச்சிக்கு மோடி அரசு தந்துள்ள திட்டங்கள்: தெற்கு மாவட்ட பாஜக தலைவர் பட்டியல்!
செவ்வாய் 26, மே 2026 3:13:30 PM (IST)

தவறவிட்ட 16 பவுன் தங்க நகைகள் 1 மணி நேரத்தில் மீட்பு : உரியவரிடம் ஒப்படைத்த போலீசார்..!
செவ்வாய் 26, மே 2026 11:45:52 AM (IST)

வாலிபர் தற்கொலை: போலீசார் விசாரணை!
செவ்வாய் 26, மே 2026 11:37:59 AM (IST)

தூத்துக்குடியில் காவல் நிலைய ஊழியர் மீது தாக்குதல் - 4பேர் கைது!
செவ்வாய் 26, மே 2026 11:29:56 AM (IST)

கண்மாய்களில் 1000-க்கும் மேற்பட்ட லோடு சரளைக் கற்கள் கொள்ளை; காவல் நிலையத்தில் புகார்!
செவ்வாய் 26, மே 2026 10:51:11 AM (IST)

பத்திரப்பதிவு அலுவலகத்தில் தலைவிரித்தாடும் லஞ்சம் : ரூ.10,000 முதல் பல லட்சங்கள் வரை கட்டாய வசூல்!
செவ்வாய் 26, மே 2026 10:37:02 AM (IST)










