» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் காவல் நிலைய ஊழியர் மீது தாக்குதல் - 4பேர் கைது!

செவ்வாய் 26, மே 2026 11:29:56 AM (IST)

தூத்துக்குடியில் ஒயின்ஷாப் அருகே ஏற்பட்ட தகராறை விலக்கிவிடச் சென்றபோது, காவல் நிலைய ஊழியரை தாக்கிய சம்பவத்தில் 4பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

தூத்துக்குடி கே.டி.சி. நகரைச் சேர்ந்தவர் கோமுராஜ் மகன் பிரம்மநாயகம் (35). இவர் சிப்காட் காவல் நிலையத்தில் தற்காலிகமாக டேட்டா என்ட்ரி ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். நேற்று இரவு பிரம்மநாயகம், எட்டயபுரம் ரோட்டில் உள்ள டாஸ்மாக் ஒயின்ஷாப் வழியாகச் சென்றுள்ளார். அப்போது, அங்கு சிலர் சண்டையிட்டுக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

இதனைக் கண்ட பிரம்மநாயகம், உடனடியாக அங்கு விரைந்து சென்று அந்த தகராறைத் தட்டி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த மர்ம நபர்கள் பிரம்மநாயகத்தை கொடூரமாகத் தாக்கினர். இதில் பிரம்மநாயகத்தின் தலையின் பின்புறத்தில் பலத்த வெட்டுக் காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் பிரம்மநாயகத்தை மீட்டு, தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். 

இந்த சம்பவம் புகாரின் பேரில் சிப்காட் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக தூத்துக்குடி நடராஜபுரத்தைச் சேர்ந்த கருப்பசாமி மகன் சிவா (எ) சிவலிங்கம் (33), கந்தசாமிபுரம் ஜேசு மகன் யாக்கோபு (30), போல்பேட்டை கிழக்குத் தெரு ஆண்டியப்பன் மகன் கண்ணன் (33), திரவியபுரம் ஜின்னா மகன் காதர் அலி மீரான் (32) ஆகிய 4பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital



Thoothukudi Business Directory