» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
காங்கிரஸ் மூத்த தலைவர் என்டிஎஸ் சார்லஸ் தவெகவில் ஐக்கியம்!
வியாழன் 21, மே 2026 10:19:18 AM (IST)

காங்கிரஸ் இயக்கத்தில் பல்வேறு பொறுப்புகள் வகித்து வந்த மூத்த நிர்வாகி என்டிஎஸ் சாா்லஸ் தவெக பொதுச் செயலாளர் அமைச்சா் ஆனந்த முன்னிலையில் தவெகவில் இணைந்தார்.
தென் மாவட்டங்களில் 42 ஆண்டுகளுக்கும் மேலாகக் காங்கிரஸ் மற்றும் தமாகாவில் அங்கம் வகித்து, பல்வேறு உன்னதமான பொறுப்புகளை வகித்த மூத்த அரசியல் தலைவர் என்டிஎஸ் சார்லஸ், தமிழ் மாநில காங்கிரஸிலிருந்து விலகித் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் அமைச்சர் ஆனந்த் முன்னிலையில் கட்சியில் இணைந்துள்ளார்.
ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டக் காங்கிரஸ் செயலாளராகவும், மாநிலச் செயலாளராகவும் பணியாற்றி தென் மாவட்டங்களில் கட்சி வளர்ச்சிக்குக் கடும் உழைப்பை நல்கியவர். தமாகா தலைவர் ஜி.கே.வாசனுடன் மிகவும் நெருக்கமாக இருந்தவர். கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதி தமாகா வேட்பாளராக இவருடைய பெயர் இறுதி செய்யப்பட்டு, கடைசி நிமிடத்தில் மாற்றம் பெற்றது.
தனது நீண்டகால அரசியல் பணிகளுக்காகச் சுமார் 500 ஏக்கர் பரப்பளவிலான சொந்தச் சொத்துக்களை விற்றுச் செலவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கட்சியில் இணைந்த சார்லஸ், தவெக அமைச்சர்கள் மற்றும் தூத்துக்குடி எம்.எல்.ஏ ஸ்ரீநாத் ஆகியோரைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். நீண்ட அரசியல் அனுபவம் கொண்ட இவருக்கு, வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலின் போது தூத்துக்குடி மாநகர அல்லது மாவட்ட உள்கட்டமைப்பில் மிக முக்கியப் பொறுப்புகள் வழங்கப்படும் எனத் தவெக வட்டாரத்தில் பேசப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கிராம மக்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்து சிசிடிவி கேமராவை உடைத்த ரவுடி : டிஎஸ்பியிடம் புகார்!
வெள்ளி 12, ஜூன் 2026 9:53:50 PM (IST)

கோவில்பட்டி பள்ளியில் குழந்தை தொழிலாளர்முறை எதிர்ப்பு தினம் அனுசரிப்பு
வெள்ளி 12, ஜூன் 2026 9:51:41 PM (IST)

ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு: 152 மனுக்களுக்கு உடனடித் தீர்வு!
வெள்ளி 12, ஜூன் 2026 9:43:21 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் வி.காந்திராஜ் ஆய்வு!
வெள்ளி 12, ஜூன் 2026 8:10:10 PM (IST)

சிஎஸ்ஆர் நிதியுடன் 1000 பண்ணைக்குட்டைகள் அமைக்கும் திட்டம்: விவசாயிகளுக்கு ஆட்சியர் அழைப்பு!
வெள்ளி 12, ஜூன் 2026 5:52:17 PM (IST)

தூத்துக்குடியில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை வாகனங்களை டிஐஜி நேரில் ஆய்வு!
வெள்ளி 12, ஜூன் 2026 5:16:11 PM (IST)









