» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சங்கரன்குடியிருப்பு நாராயண சுவாமி நிழல் தாங்கல் சித்திரைத் திருவிழா: அய்யா வாகனத்தில் வீதி உலா!

வியாழன் 7, மே 2026 8:07:46 PM (IST)



சாத்தான்குளம் அருகேயுள்ள சங்கரன்குடியிருப்பு ஸ்ரீமன் நாராயண சுவாமி நிழல் தாங்கலில் சித்திரைத் திருவிழா நான்கு நாட்கள் சிறப்பாக நடைபெற்றது.

மே 3-ஆம் தேதி தொடங்கிய இந்தத் திருவிழாவின் முதல் நாளில், காலை சிறப்பு பணிவிடை மற்றும் உகப்படிப்புடன் நிகழ்ச்சிகள் துவங்கின. மதியம் உச்சிக்கால பணிவிடையும், இரவில் அன்னதானமும் நடைபெற்றது. நள்ளிரவில் அய்யா இந்திர விமான வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இரண்டாம் நாள் (மே 4) பள்ளியுணர்த்தல் மற்றும் தர்மம் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இரவு அய்யா கருட வாகனத்தில் பவனி வந்தார். மூன்றாம் நாள் (மே 5) செண்டை மேளம் முழங்க உள்ளூர் தர்மம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து இரவு 7 மணிக்கு அருளிசை பாடகர் சிவசந்திரன் குழுவினரின் இன்னிசை கச்சேரி நடைபெற்றது. பின்னர், இரவு 10 மணிக்கு அய்யா அன்ன வாகனத்தில் வீதி உலா வந்தார்.

விழாவின் நிறைவு நாளான நேற்று மே 6-ஆம் தேதி காலை பள்ளியுணர்த்தல் மற்றும் சிறப்பு தர்மம் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து காலை 8 மணிக்கு இனிமம் வழங்கும் நிகழ்ச்சியுடன் விழா இனிதே நிறைவு பெற்றது. திருவிழாவில் சங்கரன்குடியிருப்பு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். திருவிழாவிற்கான விரிவான ஏற்பாடுகளை அய்யாவின் அன்புக்கொடி மக்கள் மற்றும் நிழல் தாங்கல் நிர்வாகிகள் இணைந்து செய்திருந்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital







Thoothukudi Business Directory