» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி டாஸ்மாக் குடோனில் ஆட்சியர் ஆய்வு!
வியாழன் 7, மே 2026 4:06:20 PM (IST)

தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு வாணிபக் கழகத்தின் (டாஸ்மாக்) சேமிப்புக் கிடங்கினை மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆட்சியர் சேமிப்புக் கிடங்கில் மதுபானப் பாட்டில்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ள முறை, சரக்குகளை ஏற்றி இறக்கும் வசதிகள், கிடங்கின் பாதுகாப்பு ஏற்பாடுகள், தீயணைப்பு கருவிகளின் நிலை மற்றும் மின்சார இணைப்புகள் ஆகியவற்றைக் குறித்தும் விரிவாக ஆய்வு செய்தார்.
மேலும், கிடங்கில் உள்ள சரக்கு இருப்புப் பதிவேடுகளைப் பார்வையிட்ட ஆட்சியர், இருப்பு வைக்கப்பட்டுள்ள மதுபானங்களின் அளவு, கொள்முதல் செய்யப்பட்ட விவரம் மற்றும் விற்பனைக்காக அனுப்பப்படும் விவரங்கள் ஆகியவற்றைச் சரிபார்த்தார். கிடங்கின் தூய்மை மற்றும் சுகாதாரம் குறித்தும் ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது : வாட்ஸ்அப் மூலம் அறியும் புதிய வசதி அறிமுகம்!
வியாழன் 7, மே 2026 8:31:27 PM (IST)

குடியிருப்புக்குள் புகுந்த 5½ அடி நீள சாரைப்பாம்பு: தீயணைப்பு வீரர்கள் லாவகமாக மீட்பு!
வியாழன் 7, மே 2026 8:15:19 PM (IST)

சங்கரன்குடியிருப்பு நாராயண சுவாமி நிழல் தாங்கல் சித்திரைத் திருவிழா: அய்யா வாகனத்தில் வீதி உலா!
வியாழன் 7, மே 2026 8:07:46 PM (IST)

தண்ணீர் பாய்ச்சியபோது மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு!
வியாழன் 7, மே 2026 8:01:02 PM (IST)

மே 11 முதல் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும்: தேர்தல் நடத்தை விதிகள் விலக்கப்பட்டது!
வியாழன் 7, மே 2026 5:22:50 PM (IST)

தூத்துக்குடி அருகே ரவுடியை சுட்டுப் பிடித்த போலீசார்: மோதலில் உதவி ஆய்வாளரும் காயம்!
வியாழன் 7, மே 2026 4:21:50 PM (IST)










