» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சிறுமியிடம் சில்மிஷம்: ஜவுளிக்கடை அதிபர் கைது!
வியாழன் 7, மே 2026 8:49:55 AM (IST)
கோவில்பட்டி அருகே 17 வயது சிறுமியிடம் அநாகரிகமான முறையில் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஜவுளிக்கடை உரிமையாளரை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைத்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஜோதி நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ் (48). இவர் கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்மன் கோவில் பின்புறம் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், 17 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவரிடம் சுரேஷ் அநாகரிகமான முறையில் சில்மிஷத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட சிறுமி தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் குற்றம் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, சுரேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து புதன்கிழமை அன்று ஜவுளிக்கடை அதிபர் சுரேஷைப் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். இந்தச் சம்பவம் கோவில்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பூட்டிய வீட்டின் சாவியை எடுத்து 3 பவுன் நகை, ரூ.7,000 திருட்டு - மர்ம நபர்கள் கைவரிசை!
செவ்வாய் 19, மே 2026 12:44:14 PM (IST)

சுற்றுலா வேன் விபத்து கணவன் - மனைவி பலி : 13 பேர் படுகாயம்!
செவ்வாய் 19, மே 2026 12:33:28 PM (IST)

தூத்துக்குடியில் மே 22ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்
செவ்வாய் 19, மே 2026 12:13:17 PM (IST)

மனைவி பிரிந்து சென்றதால் கணவர் தற்கொலை!
செவ்வாய் 19, மே 2026 12:11:43 PM (IST)

ஓடும் ரயிலில் புகுந்து அடுத்தடுத்து 2 பேரிடம் நகை, செல்போன் பறிப்பு: 4 பேர் கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு!
செவ்வாய் 19, மே 2026 12:03:18 PM (IST)

குடியிருப்பு அருகே குவிக்கப்படும் குப்பைகள்! – நோய் பரவும் அபாயத்தால் பொதுமக்கள் பீதி!
செவ்வாய் 19, மே 2026 11:20:16 AM (IST)










