» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் அடையாளம் தெரியாத நபர் தற்கொலை: போலீசார் விசாரணை!
வியாழன் 7, மே 2026 8:45:46 AM (IST)
திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் உள்ள அன்னதான மண்டபத்தில், அடையாளம் தெரியாத சுமார் 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அன்னதான மண்டபத்தின் மேல்தளத்தில் தற்போது கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. புதன்கிழமை மதியம், அந்தப் பகுதியில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், ஜன்னல் கம்பியில் தனது வேஷ்டியால் தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கிடந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த திருக்கோவில் கண்காணிப்பாளர் ராமமூர்த்தி, உடனடியாக போலீசாருக்குத் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த திருக்கோவில் போலீசார், உயிரிழந்தவரின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காகத் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்த நபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்துத் தெரியவில்லை. இது தொடர்பாகத் திருக்கோவில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, உயிரிழந்த நபரின் அடையாளத்தைக் கண்டறியத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பூட்டிய வீட்டின் சாவியை எடுத்து 3 பவுன் நகை, ரூ.7,000 திருட்டு - மர்ம நபர்கள் கைவரிசை!
செவ்வாய் 19, மே 2026 12:44:14 PM (IST)

சுற்றுலா வேன் விபத்து கணவன் - மனைவி பலி : 13 பேர் படுகாயம்!
செவ்வாய் 19, மே 2026 12:33:28 PM (IST)

தூத்துக்குடியில் மே 22ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்
செவ்வாய் 19, மே 2026 12:13:17 PM (IST)

மனைவி பிரிந்து சென்றதால் கணவர் தற்கொலை!
செவ்வாய் 19, மே 2026 12:11:43 PM (IST)

ஓடும் ரயிலில் புகுந்து அடுத்தடுத்து 2 பேரிடம் நகை, செல்போன் பறிப்பு: 4 பேர் கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு!
செவ்வாய் 19, மே 2026 12:03:18 PM (IST)

குடியிருப்பு அருகே குவிக்கப்படும் குப்பைகள்! – நோய் பரவும் அபாயத்தால் பொதுமக்கள் பீதி!
செவ்வாய் 19, மே 2026 11:20:16 AM (IST)










