» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி - கச்சிக்குடா எக்ஸ்பிரஸ் ரயில் வழித்தடம் மாற்றம்; மே 6, 13ல் மதுரைக்குச் செல்லாது!
செவ்வாய் 5, மே 2026 3:55:57 PM (IST)
திருச்சி கோட்டத்தில் நடைபெற்று வரும் பொறியியல் பராமரிப்பு பணிகள் காரணமாக, தூத்துக்குடி - கச்சிக்குடா எக்ஸ்பிரஸ் ரயில் மே 6 மற்றும் 13 ஆகிய தேதிகளில் மாற்றுப் பாதையில் இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருச்சி கோட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு ரயில்வே பிரிவுகளில் பராமரிப்பு மற்றும் பொறியியல் பணிகள் நடைபெற உள்ளதால், அந்த வழியாகச் செல்லும் முக்கிய ரயில்களின் சேவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
வழித்தடம் மாற்றப்பட்ட ரயில்கள்:
மதுரை, மானாமதுரை மற்றும் காரைக்குடி வழியாக திருச்சிக்கு திருப்பி விடப்பட்டுள்ள ரயில்களின் விவரம் பின்வருமாறு:
செங்கோட்டை - மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் (16848): மே 6 முதல் 13-ம் தேதி வரை.
நாகர்கோவில் - மும்பை சி.எஸ்.டி.எம் எக்ஸ்பிரஸ் (16352): மே 7 மற்றும் 10-ம் தேதிகளில்.
கன்னியாகுமரி - ஹவுரா அதிவிரைவு ரயில் (12666): மே 9-ம் தேதி.
கன்னியாகுமரி - ஐதராபாத் சிறப்பு ரயில் (17070): மே 8-ம் தேதி.
மதுரை சந்திப்பைத் தவிர்க்கும் ரயில்கள்:
கீழ்க்கண்ட ரயில்கள் குறிப்பிட்ட நாட்களில் மதுரை சந்திப்புக்குச் செல்லாமல், விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி வழியாக திருச்சி சென்றடையும்:
குருவாயூர் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் (16128): மே 6 முதல் 13-ம் தேதி வரை.
எர்ணாகுளம் - வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் (16363): மே 6 மற்றும் 13-ம் தேதிகளில்.
தூத்துக்குடி - கச்சிக்குடா எக்ஸ்பிரஸ் (17616): மே 6 மற்றும் 13-ம் தேதிகளில்.
இந்த வழித்தட மாற்றங்கள் குறித்த தகவலை திருச்சி கோட்ட ரயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி வினோத் வெளியிட்டுள்ளார். பயணிகள் தங்கள் பயணத்தைத் திட்டமிடும் முன் ரயில்வே கால அட்டவணையைச் சரிபார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது : வாட்ஸ்அப் மூலம் அறியும் புதிய வசதி அறிமுகம்!
வியாழன் 7, மே 2026 8:31:27 PM (IST)

குடியிருப்புக்குள் புகுந்த 5½ அடி நீள சாரைப்பாம்பு: தீயணைப்பு வீரர்கள் லாவகமாக மீட்பு!
வியாழன் 7, மே 2026 8:15:19 PM (IST)

சங்கரன்குடியிருப்பு நாராயண சுவாமி நிழல் தாங்கல் சித்திரைத் திருவிழா: அய்யா வாகனத்தில் வீதி உலா!
வியாழன் 7, மே 2026 8:07:46 PM (IST)

தண்ணீர் பாய்ச்சியபோது மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு!
வியாழன் 7, மே 2026 8:01:02 PM (IST)

மே 11 முதல் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும்: தேர்தல் நடத்தை விதிகள் விலக்கப்பட்டது!
வியாழன் 7, மே 2026 5:22:50 PM (IST)

தூத்துக்குடி அருகே ரவுடியை சுட்டுப் பிடித்த போலீசார்: மோதலில் உதவி ஆய்வாளரும் காயம்!
வியாழன் 7, மே 2026 4:21:50 PM (IST)










