» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூர் தொகுதியைத் தக்கவைத்துக் கொண்ட அனிதா ஆர். ராதாகிருஷ்ணன்..!
திங்கள் 4, மே 2026 8:36:09 PM (IST)

திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், திமுக வேட்பாளர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்று தனது தொகுதியைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தொகுதியில் மொத்தம் 22 சுற்றுகளாக நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் முடிவில், திமுக வேட்பாளர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் 72,723 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் நிலவரம்:
அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் திமுக 72,723 வெற்றி
ஜே. முருகன் தமிழக வெற்றிக் கழகம் 66,851
கேஆர்எம் ராதாகிருஷ்ணன் பாரதிய ஜனதா கட்சி 34,159
ஓபிலியா நாம் தமிழர் கட்சி9 794
திமுக வேட்பாளர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் ஜே. முருகனை விட 5,872 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றியை உறுதி செய்துள்ளார். இத்தொகுதியில் தவெக வேட்பாளர் ஜே. முருகன் இறுதி வரை கடும் போட்டியை வழங்கினார். பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் 34,159 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தைப் பிடித்தார். மொத்தம் உள்ள 22 சுற்றுகளும் எண்ணி முடிக்கப்பட்டு தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு வெற்றிச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது : வாட்ஸ்அப் மூலம் அறியும் புதிய வசதி அறிமுகம்!
வியாழன் 7, மே 2026 8:31:27 PM (IST)

குடியிருப்புக்குள் புகுந்த 5½ அடி நீள சாரைப்பாம்பு: தீயணைப்பு வீரர்கள் லாவகமாக மீட்பு!
வியாழன் 7, மே 2026 8:15:19 PM (IST)

சங்கரன்குடியிருப்பு நாராயண சுவாமி நிழல் தாங்கல் சித்திரைத் திருவிழா: அய்யா வாகனத்தில் வீதி உலா!
வியாழன் 7, மே 2026 8:07:46 PM (IST)

தண்ணீர் பாய்ச்சியபோது மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு!
வியாழன் 7, மே 2026 8:01:02 PM (IST)

மே 11 முதல் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும்: தேர்தல் நடத்தை விதிகள் விலக்கப்பட்டது!
வியாழன் 7, மே 2026 5:22:50 PM (IST)

தூத்துக்குடி அருகே ரவுடியை சுட்டுப் பிடித்த போலீசார்: மோதலில் உதவி ஆய்வாளரும் காயம்!
வியாழன் 7, மே 2026 4:21:50 PM (IST)










