» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் தவெக ஸ்ரீநாத் வலுவான முன்னிலை: வாக்கு எண்ணிக்கை நிலவரம்
திங்கள் 4, மே 2026 3:08:58 PM (IST)
தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில், தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் ஸ்ரீநாத் அபார முன்னிலை பெற்று வெற்றியை நோக்கி முன்னேறி வருகிறார்.
2026-ஆம் ஆண்டு நடைபெற்று வரும் சட்டமன்றப் பொதுத்தேர்தலில், தூத்துக்குடி தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது பதிவாகியுள்ள 15-வது சுற்று முடிவுகளின்படி, தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் 24123 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜேக்கப் தேவதாஸ் அபிஷேக் 6,677 வாக்குகளைப் பெற்றுள்ளார். தற்போது வரை ஸ்ரீநாத், தனது 24,123 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று, வெற்றியை நோக்கி முன்னேறி வருகிறார்.
வாக்கு நிலவரம் (15-வது சுற்று):
ஸ்ரீநாத் (தவெக) - 60,102
கீதாஜீவன் (திமுக ) - 35,979
செல்லப்பாண்டியன் (அதிமுக) - 14,623
ஜேக்கப் தேவதாஸ் அபிஷேக் (நாம் தமிழர்) - 6,677
தூத்துக்குடி தொகுதி நிலவரம் (17-வது சுற்று)
தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ நிலவரப்படி, 17-வது சுற்று முடிவில் வேட்பாளர்களின் வாக்கு விவரம் வருமாறு:
ஸ்ரீநாத் (த.வெ.க.) 67,633 முன்னிலை 26,772
கீதாஜீவன் (திமுக) 40,861
செல்லப்பாண்டியன் (அதிமுக) 15,517
ஜேக்கப் தேவதாஸ் அபிஷேக் (நாம் தமிழர்) 7,251
வாக்கு விவரங்கள் (18-வது சுற்று):
ஸ்ரீநாத் த.வெ.க. 71,520 (முன்னிலை 28,169)
கீதாஜீவன் திமுக 43,351
செல்லப்பாண்டியன் அதிமுக 16,508
ஜேக்கப் தேவதாஸ் அபிஷேக் நாம் தமிழர் 7,709
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது : வாட்ஸ்அப் மூலம் அறியும் புதிய வசதி அறிமுகம்!
வியாழன் 7, மே 2026 8:31:27 PM (IST)

குடியிருப்புக்குள் புகுந்த 5½ அடி நீள சாரைப்பாம்பு: தீயணைப்பு வீரர்கள் லாவகமாக மீட்பு!
வியாழன் 7, மே 2026 8:15:19 PM (IST)

சங்கரன்குடியிருப்பு நாராயண சுவாமி நிழல் தாங்கல் சித்திரைத் திருவிழா: அய்யா வாகனத்தில் வீதி உலா!
வியாழன் 7, மே 2026 8:07:46 PM (IST)

தண்ணீர் பாய்ச்சியபோது மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு!
வியாழன் 7, மே 2026 8:01:02 PM (IST)

மே 11 முதல் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும்: தேர்தல் நடத்தை விதிகள் விலக்கப்பட்டது!
வியாழன் 7, மே 2026 5:22:50 PM (IST)

தூத்துக்குடி அருகே ரவுடியை சுட்டுப் பிடித்த போலீசார்: மோதலில் உதவி ஆய்வாளரும் காயம்!
வியாழன் 7, மே 2026 4:21:50 PM (IST)










