» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் விறுவிறுப்பான வாக்கு எண்ணிக்கை : பலத்த பாதுகாப்பில் 6 தொகுதிகளின் எதிர்காலம்!

திங்கள் 4, மே 2026 8:12:22 AM (IST)



தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (மே 4) காலை 8 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளின் வாக்கு பெட்டிகளும் பலத்த பாதுகாப்புடன் எண்ணப்பட்டு வருகின்றன.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளின் வாக்கு பெட்டிகளும் தூத்துக்குடி வ.உ.சி பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்போடு வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணும் மையத்திற்குள் செல்லும் முகவர்கள் அனைவரும் தீவிர சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.

முகவர்கள் தங்களுடன் பேனா மற்றும் பேப்பர் மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டனர். சிகரெட், பீடி மற்றும் தண்ணீர் பாட்டில்கள் கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அறையை விட்டு ஒருமுறை வெளியே வரும் முகவர்கள், மீண்டும் உள்ளே செல்ல அனுமதி இல்லை என்ற கடும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை சரியாக 8 மணி அளவில் தபால் வாக்குகள் (Postal Ballots) எண்ணும் பணி முதலில் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளன. இதையொட்டி வாக்கு எண்ணும் மையத்தைச் சுற்றி மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital






Thoothukudi Business Directory