» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கள்ளச் சாராயம் காய்ச்சிய நபர் கைது: 2.5 லிட்டர் சாராயம் மற்றும் மூலப்பொருட்கள் பறிமுதல்!
திங்கள் 4, மே 2026 8:07:13 AM (IST)
ஆத்தூர் அருகே உள்ள குமாரப்பண்ணையூரில் கள்ளச் சாராயம் காய்ச்சி விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்த சாராயம் மற்றும் தயாரிப்புப் பொருட்களைப் பறிமுதல் செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் அருகே சோ்ந்தபூமங்கலம், குமாரப்பண்ணையூரைச் சோ்ந்த மாசானமுத்து மகன் முத்துக்குமாா் (50) என்பவர், தனது வீட்டில் கள்ளச் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக ஆத்தூர் போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் அடிப்படையில், ஆய்வாளா் பிரபாகரன் தலைமையில் உதவி ஆய்வாளா் முனியசாமி உள்ளிட்ட போலீஸாா் முத்துக்குமாா் வீட்டில் அதிரடி சோதனை மேற்கொண்டனா்.
இந்தச் சோதனையில், முத்துக்குமாா் கள்ளச் சாராயம் காய்ச்சி விற்பனைக்கு வைத்திருந்தது உறுதி செய்யப்பட்டது. அவரது வீட்டிலிருந்து 2.5 லிட்டா் கள்ளச் சாராயம், சாராயம் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட பானை, சாராயம் காய்ச்ச வைக்கப்பட்டிருந்த ஊறல் பொருள்கள் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
இதனைத் தொடர்ந்து, கள்ளச் சாராயம் காய்ச்சிய குற்றத்திற்காக முத்துக்குமாரை ஆத்தூர் போலீசார் கைது செய்துள்ளனர். இது குறித்து அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, மேலும் யாருக்காவது இதில் தொடர்பு உள்ளதா என்பது குறித்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது : வாட்ஸ்அப் மூலம் அறியும் புதிய வசதி அறிமுகம்!
வியாழன் 7, மே 2026 8:31:27 PM (IST)

குடியிருப்புக்குள் புகுந்த 5½ அடி நீள சாரைப்பாம்பு: தீயணைப்பு வீரர்கள் லாவகமாக மீட்பு!
வியாழன் 7, மே 2026 8:15:19 PM (IST)

சங்கரன்குடியிருப்பு நாராயண சுவாமி நிழல் தாங்கல் சித்திரைத் திருவிழா: அய்யா வாகனத்தில் வீதி உலா!
வியாழன் 7, மே 2026 8:07:46 PM (IST)

தண்ணீர் பாய்ச்சியபோது மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு!
வியாழன் 7, மே 2026 8:01:02 PM (IST)

மே 11 முதல் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும்: தேர்தல் நடத்தை விதிகள் விலக்கப்பட்டது!
வியாழன் 7, மே 2026 5:22:50 PM (IST)

தூத்துக்குடி அருகே ரவுடியை சுட்டுப் பிடித்த போலீசார்: மோதலில் உதவி ஆய்வாளரும் காயம்!
வியாழன் 7, மே 2026 4:21:50 PM (IST)










