» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி அருகே லாரி மீது வேன் மோதி 7 பேர் காயம்!
திங்கள் 4, மே 2026 8:04:45 AM (IST)

தூத்துக்குடி அருகே சாலையில் நின்றுகொண்டிருந்த கனரக லாரி மீது வேன் மோதிய விபத்தில், ஈரோட்டைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட 7 பேர் காயமடைந்தனர்.
ஈரோடு மாவட்டம் கவுந்தபாடி பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (38) என்பவர் ஓட்டி வந்த வேனில், ஒரு குழுவினர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குச் சென்று கொண்டிருந்தனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணி அளவில், தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலையில் உள்ள அணுகுசாலை அருகே வேன் வந்து கொண்டிருந்தது.
அப்போது சாலையில் நின்றுகொண்டிருந்த ஒரு கனரக லாரி மீது எதிர்பாராதவிதமாக வேன் பலமாக மோதியது. இந்த விபத்தில் வேன் ஓட்டுநர் மணிகண்டன் மற்றும் வேனில் பயணித்த மல்லிகா (58) ஆனந்தன் (39) ராஜேஸ்வரி (39) குணசேகரன் (37) சிறுவர்கள் ஹரீஸ்குமார் (11) மற்றும் ஹரீஸ்மா (5) ஆகிய 7 பேர் காயமடைந்தனர்:
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தூத்துக்குடி தென்பாகம் போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து தென்பாகம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது : வாட்ஸ்அப் மூலம் அறியும் புதிய வசதி அறிமுகம்!
வியாழன் 7, மே 2026 8:31:27 PM (IST)

குடியிருப்புக்குள் புகுந்த 5½ அடி நீள சாரைப்பாம்பு: தீயணைப்பு வீரர்கள் லாவகமாக மீட்பு!
வியாழன் 7, மே 2026 8:15:19 PM (IST)

சங்கரன்குடியிருப்பு நாராயண சுவாமி நிழல் தாங்கல் சித்திரைத் திருவிழா: அய்யா வாகனத்தில் வீதி உலா!
வியாழன் 7, மே 2026 8:07:46 PM (IST)

தண்ணீர் பாய்ச்சியபோது மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு!
வியாழன் 7, மே 2026 8:01:02 PM (IST)

மே 11 முதல் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும்: தேர்தல் நடத்தை விதிகள் விலக்கப்பட்டது!
வியாழன் 7, மே 2026 5:22:50 PM (IST)

தூத்துக்குடி அருகே ரவுடியை சுட்டுப் பிடித்த போலீசார்: மோதலில் உதவி ஆய்வாளரும் காயம்!
வியாழன் 7, மே 2026 4:21:50 PM (IST)










