» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இது எங்கள் பூமி: புதிய விவசாய கதை புத்தகம் வெளியீடு

திங்கள் 4, மே 2026 7:58:32 AM (IST)



கோவில்பட்டி  இலக்கியச் சாரல் சார்பாக கோவில்பட்டி எழுத்தாளர் கோ.சுரேஷ்குமார் எழுதிய "இது எங்கள் பூமி” என்ற விவசாயம் தொடர்பான 27 கதைகள் கொண்ட புதிய புத்தகம் வெளியீடு விஸ்வாஸ் மற்றும்  சிவதாம்  கல்வி அறக்கட்டளை யோகா தியான கூட்ட அரங்கில் நடந்தது.

மேனாள் தலைமை ஆசிரியர் நல்லாசியர் ப. ஜான்கனேஷ் தலைமை தாங்கினார். ஞான ஒளி மலர் மேனாள் தலைமை ஆசிரியை இந்திராணி,  முனைவர் முருக சரஸ்வதி, கவிஞர் இரா.சிவானந்தம், எழுத்தாளர்  போத்தி ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். த.மு.எ.ச செயற்குழு உறுப்பினர் பெ.ஜெகநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு முதல் புத்தகத்தை வெளியிட்டார்.

தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேனாள் மேலாளர் பா.சங்கர், தமிழாசிரியை இராதா, கிராம நிர்வாக அலுவலர் முருகானந்தம் ஆகியோர் முதல் புத்தகங்களை பெற்றுக் கொண்டனர்.

தொடர்ந்து வரகவி நல்லாசிரியர் மா. முருகேசன்,  பேராசிரியை செல்வம், மேனாள் களத்து மேடு மாத இதழ் ஆசிரியர் தமிழ் தம்பி, மேனாள் தபால் துறை ஊழியர் தவமணி, யூ.பி.எம்.எஸ். பள்ளி ஆசிரியர்    சந்தன மாரியப்பன், பஞ்., யூனியன் பள்ளி தலைமை ஆசிரியை பேச்சியம்மாள், இலுப்பையூரணி தமிழ் பாப்பிஸ்டு பள்ளி தலைமை ஆசிரியர் ஸீரிதர்,  பிரமுகர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி பேசினார்கள். முடிவில் எழுத்தாளர் கோ.சுரேஷ்குமார் ஏற்புரை வழங்கி நன்றி கூறினார்.

ஏற்பாடுகளை இலக்கியச் சாரல் இயக்குநர் தினகரன் செய்தார். நிகழ்ச்சியில் பல்வேறு திறன் ஆற்றல் கொண்ட இலக்கிய ஆர்வலர்கள் மற்றும் கல்லூரி மாணவர், பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.  அனைவருக்கும் கோடை வெயில் தாக்கம் குறைய பப்பாளி மற்றும் தர்பூசணி பழவகை இயற்கை பானம்  வழங்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital




Thoothukudi Business Directory