» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வாலிபரைத் தாக்கி வாய்க்காலில் வீசியவர் கைது : மேலும் 4 பேருக்கு போலீஸ் வலைவீச்சு!

ஞாயிறு 3, மே 2026 9:41:13 PM (IST)

குரும்பூர் அருகே வாலிபரைத் தாக்கி வாய்க்காலில் தூக்கி வீசிய சம்பவத்தில் ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள 4 பேரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகே உள்ள சேதுசுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்தவர் சீனி (27). இவரது நண்பர் சொக்கப்பழங்கரையைச் சேர்ந்த செந்தில்குமார் (26). இவர்கள் இருவரும் கடந்த ஏப்ரல் 20-ம் தேதி ராஜபதியில் நடைபெற்ற துக்க நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று மது அருந்தியுள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தகராறு கைகலப்பாக மாறியது. அங்கிருந்தவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில், நேற்று சேதுக்குவாய்தான் வாய்க்கால் பாலத்தில் சீனி நின்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த செந்தில்குமார் மற்றும் அவரது நண்பரான மாரிமுத்து உள்ளிட்ட 5 பேர், பழைய பகையை மனதில் வைத்து சீனியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். ஆத்திரமடைந்த அவர்கள் சீனியைத் தாக்கி, அங்கிருந்த வாய்க்காலில் தூக்கி வீசினர். இதில் சீனியின் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. தற்போது அவர் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பாதிக்கப்பட்ட சீனி அளித்த புகாரின் பேரில் குரும்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மாரிமுத்து என்பவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள செந்தில்குமார் உள்ளிட்ட மற்ற 4 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital





Thoothukudi Business Directory