» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கொலை முயற்சி வழக்கு: தூத்துக்குடியில் ரவுடிகள் இருவர் குண்டர் சட்டத்தில் கைது!
ஞாயிறு 3, மே 2026 9:38:13 PM (IST)
தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட இரண்டு நபர்களைத் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் போலீசார் இன்று கைது செய்தனர்.
தூத்துக்குடியைச் சேர்ந்த டிக்சன் (எ) சுல்தான் (23) மற்றும் இருதய ஜாஸ்பர் (28) ஆகிய இருவரும் வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை முயற்சி வழக்கில் தொடர்புடையவர்கள். இவர்களுடைய தொடர் குற்ற நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், இவர்கள் மீது தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் (1982) கீழ் நடவடிக்கை எடுக்க வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் பரிந்துரை செய்தார்.
வடபாகம் காவல் நிலைய ஆய்வாளரின் வேண்டுகோளை ஏற்று, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி. மதன் மாவட்ட ஆட்சித் தலைவருக்குப் பரிந்துரை கடிதம் வழங்கினார். மாவட்ட ஆட்சித் தலைவரின் உத்தரவின் பேரில், மேற்படி இருவர் மீதும் இன்று (03.05.2026) தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, டிக்சன் (எ) சுல்தான் மற்றும் இருதய ஜாஸ்பர் ஆகிய இருவரையும் வடபாகம் காவல் நிலைய போலீசார் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். மாவட்டத்தில் சட்டம் - ஒழுங்கைப் பராமரிக்கவும், குற்றச் செயல்களில் ஈடுபடுவோரைக் கட்டுப்படுத்தவும் இத்தகைய கடுமையான நடவடிக்கைகள் தொடரும் என மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது : வாட்ஸ்அப் மூலம் அறியும் புதிய வசதி அறிமுகம்!
வியாழன் 7, மே 2026 8:31:27 PM (IST)

குடியிருப்புக்குள் புகுந்த 5½ அடி நீள சாரைப்பாம்பு: தீயணைப்பு வீரர்கள் லாவகமாக மீட்பு!
வியாழன் 7, மே 2026 8:15:19 PM (IST)

சங்கரன்குடியிருப்பு நாராயண சுவாமி நிழல் தாங்கல் சித்திரைத் திருவிழா: அய்யா வாகனத்தில் வீதி உலா!
வியாழன் 7, மே 2026 8:07:46 PM (IST)

தண்ணீர் பாய்ச்சியபோது மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு!
வியாழன் 7, மே 2026 8:01:02 PM (IST)

மே 11 முதல் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும்: தேர்தல் நடத்தை விதிகள் விலக்கப்பட்டது!
வியாழன் 7, மே 2026 5:22:50 PM (IST)

தூத்துக்குடி அருகே ரவுடியை சுட்டுப் பிடித்த போலீசார்: மோதலில் உதவி ஆய்வாளரும் காயம்!
வியாழன் 7, மே 2026 4:21:50 PM (IST)










