» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் ஆபத்தான டிஜிட்டல் பேனர்கள்: உடனடியாக அகற்ற சிபிஎம் வலியுறுத்தல்!
ஞாயிறு 3, மே 2026 9:27:47 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் விபத்துகளை ஏற்படுத்தும் வகையில் வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் பேனர்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாகக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாநகரின் முக்கியச் சாலைகள் மற்றும் சந்திப்புகளில் விதிகளை மீறி வைக்கப்பட்டுள்ள ராட்சத டிஜிட்டல் பேனர்களால் வாகன ஓட்டிகளின் கவனம் சிதறி விபத்துகள் ஏற்படும் சூழல் நிலவுகிறது. பல இடங்களில் நடைபாதைகளை ஆக்கிரமித்து பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகின்றனர்.
தற்போது தூத்துக்குடியில் பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்து வருவதால், பலவீனமாக உள்ள பேனர்கள் சரிந்து விழுந்து உயிர்ச்சேதம் ஏற்படும் அபாயம் உள்ளதாகக் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள மற்றும் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள அனைத்து டிஜிட்டல் பேனர்களையும் மாநகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் அகற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது : வாட்ஸ்அப் மூலம் அறியும் புதிய வசதி அறிமுகம்!
வியாழன் 7, மே 2026 8:31:27 PM (IST)

குடியிருப்புக்குள் புகுந்த 5½ அடி நீள சாரைப்பாம்பு: தீயணைப்பு வீரர்கள் லாவகமாக மீட்பு!
வியாழன் 7, மே 2026 8:15:19 PM (IST)

சங்கரன்குடியிருப்பு நாராயண சுவாமி நிழல் தாங்கல் சித்திரைத் திருவிழா: அய்யா வாகனத்தில் வீதி உலா!
வியாழன் 7, மே 2026 8:07:46 PM (IST)

தண்ணீர் பாய்ச்சியபோது மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு!
வியாழன் 7, மே 2026 8:01:02 PM (IST)

மே 11 முதல் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும்: தேர்தல் நடத்தை விதிகள் விலக்கப்பட்டது!
வியாழன் 7, மே 2026 5:22:50 PM (IST)

தூத்துக்குடி அருகே ரவுடியை சுட்டுப் பிடித்த போலீசார்: மோதலில் உதவி ஆய்வாளரும் காயம்!
வியாழன் 7, மே 2026 4:21:50 PM (IST)










