» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோவில்பட்டி ஆதிபராசக்தி மன்றத்தில் மழை வளம் சிறக்க கலச விளக்குவேள்வி பூஜை!

ஞாயிறு 3, மே 2026 4:47:26 PM (IST)



கோவில்பட்டி ஆதிபராசக்தி மன்றத்தில் மழை வளம் சிறக்க கலச விளக்குவேள்வி பூஜை நடைபெற்றது.

மேல்மருவத்தூர் ஆன்மிக குரு அருள்திரு பங்காரு அம்மா அவர்களின் 86வது அவதார பெருமங்கல விழா கோவில்பட்டி மந்திதோப்பு ரோட்டில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் நடைபெற்றது. மழைவளம் வேண்டியும், விவசாயம் வளம்பெறவும், மக்கள் நலமுடன் வளம்பெறவும், தொழில்வளம் சிறக்கவும், கல்வி வளம் சிறக்கவும்,பட்டாசு ஆலைகளில் விபத்துக்கள் ஏற்படாதவன்னம் அருள்புரிய வேண்டி சங்கல்பம் செய்யப்பட்டு கலச விளக்குவேள்வி பூஜை நடைபெற்றது. 

ஆன்மிக இயக்க மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் சக்தி. ஆர்.முருகன் வேள்வி பூஜையை தொடங்கி வைத்தார்.சக்தி கொடியை மன்ற தலைவர் அப்பாசாமி ஏற்றிவைத்தார். தொடர்ந்து அடிகளார் வளர்க்கும் ஆன்மிகத்தில் பெண்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் என்ற தலைப்பில் மகளிர் ஒருங்கிணைப்பாளர் பத்மாவதி ஆன்மிக சொற்பொழிவு ஆற்றினார்.

தொடர்ந்து 25 ஏழை பெண்களுக்கு நலத்திட்ட உதவியாக சேலைகள் வழங்கப்பட்டது. அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை தளவாய்புரம் ஆதிபராசக்தி மன்ற தலைவர் ராஜ், கழுகுமலை மன்ற தலைவர் அழகர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.


விழாவில் அரசு மருத்துவமனை கண் மருத்துவர் டி. உமா, மாவட்ட தகவல் ஒருங்கிணைப்பாளர் கோபிநாத், இந்திரா நகர் மன்ற பொருளாளர் அழகு மாணிக்கம்,  மன்ற பொறுப்பாளர்கள் அருணாசல பாண்டியன், கற்பகவள்ளி, ராதா, விஸ்வநாத்,  இராஜலெட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital








Thoothukudi Business Directory