» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கோடை விடுமுறையில் மாணவர்கள் பாதுகாப்பு : விழிப்புணர்வு ஏற்படுத்தக் கோரிக்கை!
ஞாயிறு 3, மே 2026 12:16:10 PM (IST)
பள்ளி விடுமுறை காலத்தை மாணவர்கள் பாதுகாப்பாகவும் பயனுள்ளதாகவும் கழிப்பதை உறுதி செய்ய மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என குழந்தைகள் நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் ஆண்டு இறுதித் தேர்வுகள் முடிந்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்கள் வீடுகளிலும், உறவினர் வீடுகளிலும் விடுமுறையைக் கழித்து வருகின்றனர். இந்தச் சூழலில், மாணவர்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பினை உறுதி செய்ய மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்களுக்குத் தூத்துக்குடி வழக்கறிஞர் சுப. மாடசாமி கடிதம் எழுதியுள்ளார்.
அதில், தட்டப்பாறையில் ஐடிஐ மாணவர் குளத்தில் மூழ்கி உயிரிழந்தது வேதனையளிக்கிறது. மாணவர்கள் நீர்நிலைகளில் குளிப்பதைத் தவிர்க்க வேண்டும். ஆழமான நீர்நிலைப் பகுதிகளில் உள்ளாட்சி நிர்வாகங்கள் எச்சரைப் பலகைகளை வைக்க வேண்டும். தற்போது வீசும் பலத்த சூறாவளி காற்றினால் மின்கம்பிகள் அறுந்து கிடக்க வாய்ப்புள்ளதால், அவற்றை மாணவர்கள் தொட வேண்டாம் என அறிவுறுத்த வேண்டும்.
மாணவர்கள் பெற்றோரின் இருசக்கர வாகனங்களை எடுத்துக்கொண்டு வேகமாகச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். விடுமுறை காலத்தில் மாணவர்கள் புத்தக வாசிப்பு, கணினிப் பயிற்சி மற்றும் ஆக்கப்பூர்வமான விளையாட்டுகளில் ஈடுபட மாவட்ட நிர்வாகம் ஊக்கப்படுத்த வேண்டும்.
காவல் துறை நடவடிக்கை: அனைத்து மகளிர் காவல் நிலைய அதிகாரிகள் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மாணவர்களின் எதிர்கால நலன் கருதி, மாவட்ட நிர்வாகமும் குழந்தைகள் நல அமைப்புகளும் ஒருங்கிணைந்து இந்த ஆலோசனைகளைச் செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது : வாட்ஸ்அப் மூலம் அறியும் புதிய வசதி அறிமுகம்!
வியாழன் 7, மே 2026 8:31:27 PM (IST)

குடியிருப்புக்குள் புகுந்த 5½ அடி நீள சாரைப்பாம்பு: தீயணைப்பு வீரர்கள் லாவகமாக மீட்பு!
வியாழன் 7, மே 2026 8:15:19 PM (IST)

சங்கரன்குடியிருப்பு நாராயண சுவாமி நிழல் தாங்கல் சித்திரைத் திருவிழா: அய்யா வாகனத்தில் வீதி உலா!
வியாழன் 7, மே 2026 8:07:46 PM (IST)

தண்ணீர் பாய்ச்சியபோது மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு!
வியாழன் 7, மே 2026 8:01:02 PM (IST)

மே 11 முதல் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும்: தேர்தல் நடத்தை விதிகள் விலக்கப்பட்டது!
வியாழன் 7, மே 2026 5:22:50 PM (IST)

தூத்துக்குடி அருகே ரவுடியை சுட்டுப் பிடித்த போலீசார்: மோதலில் உதவி ஆய்வாளரும் காயம்!
வியாழன் 7, மே 2026 4:21:50 PM (IST)










