» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மூன்று திருமணங்கள் செய்த வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை - போலீசார் விசாரணை!

ஞாயிறு 3, மே 2026 11:28:02 AM (IST)

கயத்தாறு அருகே குடும்பப் பிரச்சினை மற்றும் மதுப் பழக்கத்தால் மனமுடைந்த வாலிபர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு தாலுகாவிற்கு உட்பட்டசன்னதுபுதூர் கீழூர் காலனித் தெருவைச் சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் சுரேஷ் குமார் (32). இவர் எந்த வேலைக்கும் செல்லாமல் எப்போதும் மது போதையில் சுற்றித் திரிந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், இவருக்குச் சற்று மனநலம் பாதித்தது போன்ற பாதிப்புகளும் இருந்து வந்துள்ளன.

சுரேஷ் குமாருக்கு மூன்று மனைவிகள். இதில் முதல் இரண்டு மனைவிகள் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே இவரைப் பிரிந்து சென்றுவிட்டனர். தற்போது மூன்றாவது மனைவியுடன் வசித்து வந்த சுரேஷ் குமாருக்கு, பிரிந்து சென்ற முதல் மனைவி மூலம் 11 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. மற்ற இரண்டு மனைவிகளுக்கும் குழந்தைகள் இல்லை.

நேற்று இரவு வழக்கம்போல் வீட்டிற்கு வந்த சுரேஷ் குமார், இரவு 11:00 மணி அளவில் தூங்கச் சென்ற அவர், தனது அறையைப் உள்புறமாகப் பூட்டிக்கொண்டு சீலிங் ஃபேனில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இன்று காலை 6:30 மணி அளவில் வீட்டார் பார்த்தபோதுதான் அவர் தற்கொலை செய்துகொண்ட விபரம் தெரியவந்தது. இது குறித்துத் தகவல் அறிந்த கயத்தாறு போலீசார், உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்

தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் கொள்ள ஆசாரி தெருவைச் சேர்ந்தவர் தர்மர். இவருடைய மகன் பாரதி (42). இவருக்குத் தேவி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். பாரதி கடந்த மூன்று ஆண்டுகளாகத் தனது மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

நேற்று பாரதி அதிக குடிபோதையில் இருந்துள்ளார். அப்போது அவர் தனது தந்தையிடம் தான் சாகப்போவதாகக் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரைச் சத்தம் போட்டு கண்டித்துள்ளனர். பின்னர் அவர் தனது அறைக்குள் தூங்கச் சென்றுள்ளார்.

இன்று காலை பாரதியின் தந்தை அறைக்குச் சென்று பார்த்தபோது, பாரதி மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்துக் கடம்பூர் போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital



Thoothukudi Business Directory