» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நாசரேத் ஆர்ட் தொழிற்பள்ளி பழைய மாணவர் சங்க ஆண்டு விழா

ஞாயிறு 3, மே 2026 11:26:01 AM (IST)



நாசரேத் ஆர்ட் தொழிற்பள்ளியின் பழைய மாணவர் சங்க 52 வது ஆண்டு விழா நடைபெற்றது.

நாசரேத் ஆர்ட் தொழிற் பள்ளி பழைய மாணவர் சங்க 52 வது ஆண்டு விழாவை முன்னிட்டு, கிறிஸ்து சிற்றாலயத்தில்  சிறப்பு திருவிருந்து ஆராதனை நடைபெற்றது. நாசரேத் தூய யோவான் பேராலய உதவி குருவானவர் தனசேகர் ராஜா தலைமை தாங்கினார். சபை ஊழியர் ஜெசுசெல்வன் முன்னிலை வகித்தார். குருவானவர்  செல்வராஜ் சிறப்பு செய்தி வழங்கினார்.

இதைத் தொடர்ந்து நடைபெற்ற பழைய மாணவர் சங்க 52 வது ஆண்டு விழா பொதுக்குழு கூட்டத்திற்கு நாசரேத் ஆர்ட் தொழிற் பள்ளி தாளாளர் திலகர் தலைமை தாங்கினார். பழைய மாணவர் பாஸ்டர் சௌந்திரராஜன் ஆரம்ப ஜெபம் செய்தார். ஏ.டி.சி. ஊழியர் சில்வான் வேதபாடம் வாசித்தார். பழைய மாணவர் சங்க செயலாளர் ஜோசப் அனைவரையும் வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தார். மூத்த உறுப்பினர் தங்கராஜ், முதல்வர் (பொறுப்பு) ஜாண்சன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். 

தொடர்ந்து பழைய மாணவர்கள் தங்களது கற்றல் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பின்னர் புதிதாக வந்த முன்னாள் மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர். இதில் நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரி பர்சார் முத்து சந்திரசேகர் உட்பட பழைய மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.  நிறைவாக பழைய மாணவர் சங்கத் தலைவர் இம்மானுவேல் அருள்தம்பி நன்றியுரை ஆற்றினார். 

விழாவிற்கான ஏற்பாடுகளை நாசரேத் ஆர்ட் தொழிற் பள்ளி முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் இம்மானுவேல், துணைத் தலைவர் சாமுவேல், செயலாளர் ஜோசப், இணைச் செயலாளர்கள் ஜாண்சாலமோன், ஜாண்தாமஸ், இம்மானுவேல் பால்ராஜ், பொருளாளர் ஜான்சன் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital






Thoothukudi Business Directory