» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் சூறாவளி காற்றுடன் திடீர் கனமழை : மின்மாற்றி வெடித்ததால் இருளில் மூழ்கிய நகரம்!

ஞாயிறு 3, மே 2026 10:11:53 AM (IST)

தூத்துக்குடியில் கடந்த சில வாரங்களாக நிலவி வந்த கடும் வெயிலுக்குப் பிறகு, நேற்று இரவு திடீரென வீசிய பலத்த சூறாவளி காற்று மற்றும் மழையினால் மின்தடை ஏற்பட்டு பல்வேறு பகுதிகள் இருளில் மூழ்கின. 

நேற்று காலை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், மாலை முதல் இதமான சூழல் நிலவியது. இரவு 9 மணி அளவில் திடீரென பலத்த சூறாவளி காற்று வீசத் தொடங்கியது. இதனால் சாலைகள் மற்றும் தெருக்களில் செம்மண் கலந்த புழுதி படர்ந்து காணப்பட்டது. வீடுகள், அலுவலகங்கள் மற்றும் கடைகளிலும் புழுதி படிந்ததால் மக்கள் சிரமத்திற்குள்ளாகினர்.

பலத்த காற்றினால் தூத்துக்குடி - ராமேஸ்வரம் சாலையில் வைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்புகள் சரிந்து விழுந்தன. மேலும், கடைகளில் இருந்த விளம்பரப் பலகைகளும் காற்றால் தூக்கி வீசப்பட்டன. பாலவிநாயகர் கோவில் சாலை அருகே இருந்த மின்மாற்றி பலத்த காற்றினால் வெடித்து பழுதானது. இதனால் பாலவிநாயகர் சாலை, பாளையங்கோட்டை சாலை, எட்டயபுரம் சாலை உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகள் மின்சாரமின்றி இருளில் மூழ்கின.

சூறாவளி காற்றைத் தொடர்ந்து இரவு 9.40 மணி அளவில் மழையும் பெய்யத் தொடங்கியது. சாலைகளில் மணல் குவியல் மற்றும் ஆங்காங்கே மரங்கள் விழுந்து கிடந்ததால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி மெதுவாகச் செல்லும் நிலை ஏற்பட்டது. இதனால் நகரின் முக்கியச் சாலைகளில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital





Thoothukudi Business Directory