» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆட்டோ - பைக் மோதி விபத்து: வாலிபர் உயிரிழப்பு!

ஞாயிறு 3, மே 2026 10:07:11 AM (IST)

உடன்குடி அருகே ஆட்டோ மீது பைக் மோதிய விபத்தில் படுகாயம் அடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் பறக்கை மதுசூதனபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகன் கணேஷ் (31), கூலித் தொழிலாளி ஆவார். இவர் நேற்று உடன்குடியில் இருந்து செட்டியாபத்து செல்லும் சாலையில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு முன்னால் சென்று கொண்டிருந்த லோடு ஆட்டோ மீது கணேஷின் மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது.

இந்த மோதலில் தூக்கி வீசப்பட்ட கணேஷிற்குப் பின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக உடன்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், பலனின்றி கணேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து குலசேகரன் பட்டினம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital








Thoothukudi Business Directory