» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் வரத்து குறைவால் மீன்கள் விலை கடும் உயர்வு: மக்கள் அதிர்ச்சி!
ஞாயிறு 3, மே 2026 9:19:37 AM (IST)

தூத்துக்குடியில் மீன்களின் வரத்து குறைந்ததாலும், மீன்பிடித் தடைக்காலம் அமலில் உள்ளதாலும் மீன்களின் விலை விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்துள்ளது.
தற்போது விசைப்படகுகள் கடலுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், தூத்துக்குடி மாவட்ட விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மட்டுமே மீனவர்கள் ஆழ்கடலில் தங்கி மீன்பிடித்து வருகின்றனர். அவர்கள் நேற்று சனிக்கிழமை கரை திரும்பியபோது மீன்களின் வரத்து மிகவும் குறைவாகவே இருந்தது. பள்ளி கோடை விடுமுறை காலம் என்பதால், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் கூட்டம் அலைமோதியது.
குறைவான வரத்தும் அதிக தேவையும் இருந்ததால் விலை பன்மடங்கு உயர்ந்தது. சீலா மீன் கிலோ ரூ. 1,300 - ரூ.1,500, விளை மீன் ரூ. 700 வரை, பாறை ரூ. 500 வரை, கேரை-சூரை ரக மீன்கள் ரூ. 250 - ரூ. 270, ஐலேஷ் ரூ. 250 வரை, நண்டு ரூ. 700 - ரூ. 800, ஏற்றுமதி ரக மீன்களான தம்பா, பண்டாரி, களவா ஆகியவை ரூ. 400 - ரூ. 500, குருவலை ரூ. 1,000 வரை என விற்பனையாகின. வரத்து குறைவாக இருந்தாலும், மீன்களுக்குக் கூடுதல் விலை கிடைத்ததால் நாட்டுப்படகு மீனவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது : வாட்ஸ்அப் மூலம் அறியும் புதிய வசதி அறிமுகம்!
வியாழன் 7, மே 2026 8:31:27 PM (IST)

குடியிருப்புக்குள் புகுந்த 5½ அடி நீள சாரைப்பாம்பு: தீயணைப்பு வீரர்கள் லாவகமாக மீட்பு!
வியாழன் 7, மே 2026 8:15:19 PM (IST)

சங்கரன்குடியிருப்பு நாராயண சுவாமி நிழல் தாங்கல் சித்திரைத் திருவிழா: அய்யா வாகனத்தில் வீதி உலா!
வியாழன் 7, மே 2026 8:07:46 PM (IST)

தண்ணீர் பாய்ச்சியபோது மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு!
வியாழன் 7, மே 2026 8:01:02 PM (IST)

மே 11 முதல் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும்: தேர்தல் நடத்தை விதிகள் விலக்கப்பட்டது!
வியாழன் 7, மே 2026 5:22:50 PM (IST)

தூத்துக்குடி அருகே ரவுடியை சுட்டுப் பிடித்த போலீசார்: மோதலில் உதவி ஆய்வாளரும் காயம்!
வியாழன் 7, மே 2026 4:21:50 PM (IST)










