» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆலங்கிணறு புனித சூசையப்பர் ஆலயத் திருவிழா நிறைவு: திரளான பக்தர்கள் பங்கேற்பு!

சனி 2, மே 2026 8:30:41 PM (IST)



சாத்தான்குளம் அருகே சிதம்பரபுரம் பங்குக்குட்பட்ட ஆலங்கிணறு தொழிலாளிகளின் பாதுகாவலர் புனித சூசையப்பர் ஆலயத் திருவிழா பத்து நாட்கள் சிறப்பாக நடைபெற்று, மே 1-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.

இத்திருவிழா கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல் நாளில் சாத்தான்குளம் மறைவட்ட முதன்மை குரு செல்வ ஜார்ஜ் ஜெபமாலை மற்றும் கொடியேற்றத்தை நடத்தி வைத்தார். அன்று நடைபெற்ற திருப்பலியில் சொக்கன்குடியிருப்பு அருள்பணி தந்தை ஜோசப் லியோன் மறையுரை வழங்கினார். இரண்டாம் நாள் வழிபாடுகளைச் சிதம்பரபுரம் பங்குத்தந்தை கலைச்செல்வன் தலைமை தாங்கி நடத்தினார்.

திருவிழா நாட்களில் தினமும் ஜெபமாலை மற்றும் சிறப்புத் திருப்பலிகள் நடைபெற்றன. 9-ஆம் நாள் (ஏப். 30) தென் மண்டல கத்தோலிக்கப் பள்ளிகளின் கண்காணிப்பாளர் ஜோசப் ஸ்டாலின் தலைமையில் மாலை ஆராதனை நடைபெற்றது. பொத்தகாலன்விளை புனித திருக்கல்யாண மாதா திருத்தல அதிபர் ஜஸ்டின் மறையுரை வழங்கினார்.

10-ஆம் நாள் (மே 1) திருவிழாவின் இறுதி நாளில் தமிழ்நாடு விவிலிய அருள் பணி குழு பொதுச்செயலாளர் மைக்கிள் ராஜ் ஜெபஸ்டின் தலைமையில் திருவிழாத் திருப்பலியும், புது நன்மை நிகழ்வும் நடைபெற்றன.

மே 1-ஆம் தேதி மாலை தென்மண்டல மறைக்கல்வி இயக்குனர் பிரான்சிஸ் மறையுரை வழங்க, அதனைத் தொடர்ந்து கொடியிறக்கத்துடன் திருவிழா இனிதே நிறைவு பெற்றது. இதில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.

திருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சிதம்பரபுரம் பங்குத்தந்தை கலைச்செல்வன் தலைமையில், இறைமக்கள் மற்றும் திரு இருதய சபை சகோதரிகள் இணைந்து செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital







Thoothukudi Business Directory