» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சண்முகபுரம் பத்திரகாளியம்மன் கோவிலில் சித்ரா பௌர்ணமி: 401 திருவிளக்கு பூஜை கோலாகலம்!

சனி 2, மே 2026 8:30:48 AM (IST)



தூத்துக்குடி சண்முகபுரம் பகுதியில் அமைந்துள்ள பத்திரகாளியம்மன் கோவிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு 401 திருவிளக்கு பூஜை மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

தூத்துக்குடி சண்முகபுரம் இந்து நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட இக்கோவிலில் நடைபெற்ற இந்தப் பூஜையில், உலக நன்மைக்காக. 
நாட்டில் மழை வளம் பொழிந்து விவசாயம் செழிக்கவும், வறட்சி நீங்கவும்
உலகில் அன்பு, அமைதி நிலவவும், கல்வி மற்றும் தொழில் வளர்ச்சி சிறப்பாக அமைய வேண்டியும், தமிழகம் அமைதிப் பூங்காவாகத் திகழவும் பஜனை பாடல்களுடன் தீப அலங்காரம் நடைபெற்றது.

விழாவில் கோவில் செயலாளர் கார்த்திக்ராஜா, பொருளாளர் செல்வராஜ், துணைத்தலைவர் தனபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும், திருப்பணி கமிட்டி முன்னாள் செயலாளர் சண்முகசுந்தரம், மாதர் சங்க நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவிளக்கு பூஜைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் அர்ச்சகர் ஆறுமுகச்சாமி செய்திருந்தார். பூஜையின் நிறைவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital



Thoothukudi Business Directory