» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பணியிடத்தில் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை - கடை உரிமையாளர் மீது வழக்கு!
வியாழன் 30, ஏப்ரல் 2026 10:16:27 AM (IST)
சாத்தான்குளத்தில் கடையில் வேலை பார்த்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற கடை உரிமையாளர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரைத் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்த முத்துக்குமார், அப்பகுதியின் புதிய பேருந்து நிலையம் அருகே ஆம்னி பேருந்து முன்பதிவு செய்யும் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் 25 வயதுடைய பெண் ஒருவர் வேலை பார்த்து வருகிறார். கடந்த 26-ஆம் தேதி மதியம், கடையில் உள்ள தனி அறையில் வைத்து அந்தப் பெண்ணிடம் முத்துக்குமார் பாலியல் ரீதியாகத் தவறாக நடக்க முயன்றுள்ளார்.
அப்போது அந்தப் பெண் சத்தமிட்டதைத் தொடர்ந்து, அருகில் இருந்தவர்கள் அங்கு திரண்டனர். உடனே முத்துக்குமார், இச்சம்பவம் குறித்து வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவதாக அந்தப் பெண்ணிற்கு மிரட்டல் விடுத்துவிட்டுத் தப்பியோடினார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

முத்தாலங்குறிச்சி லட்சுமி நரசிம்மர் ஆலயத்தில் நரசிம்ம ஜெயந்தி விழா
சனி 2, மே 2026 3:12:08 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 5 மையங்களில் நாளை நீட் தேர்வு: மாணவர்களுக்கு முக்கிய அறிவுரைகள்!
சனி 2, மே 2026 12:45:41 PM (IST)

திருச்செந்தூரில் 70 அடி தூரத்திற்கு உள்வாங்கிய கடல்: பக்தர்கள் எச்சரிக்கையுடன் நீராட அறிவுறுத்தல்
சனி 2, மே 2026 11:23:43 AM (IST)

பங்க் ஊழியர் அசந்த நேரத்தில் கைவரிசை: 17லி பெட்ரோல், செல்போன்களைத் திருடிய மர்ம நபர்கள்!
சனி 2, மே 2026 10:43:59 AM (IST)

தூத்துக்குடி அருகே பைக் மோதி விபத்து: ஒருவர் பலி
சனி 2, மே 2026 10:38:14 AM (IST)

தீராத வயிற்று வலி: பூச்சிக்கொல்லி மருந்து குடித்த பெண் சிகிச்சை பலனின்றி பலி
சனி 2, மே 2026 10:31:51 AM (IST)









