» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சிக்கு திமுகவே காரணம்: கனிமொழி எம்பி பிரச்சாரம்!
செவ்வாய் 14, ஏப்ரல் 2026 5:13:07 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தின் வளர்ச்சிக்கு திமுக அரசு பல்வேறு திட்டஙகளை நிறைவேற்றியுள்ளதாக தேர்தல் பிரச்சாரத்தில் கனிமொழி எம்பி குறிப்பிட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதிகளில், திமுக வேட்பாளர்களை ஆதரித்து திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி. தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது மத்திய அரசு மற்றும் அதிமுக மீது அவர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
அவர் பேசியதன் முக்கிய அம்சங்கள்: தமிழ்நாட்டின் வரிப் பணத்தை எடுத்துச் செல்லும் மத்திய அரசு, திருப்பித் தரும்போது நிதியைக் குறைத்தே வழங்குகிறது. "இந்தி படித்தால்தான் நிதி" என ரூ.3,200 கோடியை மத்திய அரசு பிடித்து வைத்துள்ளது. மெட்ரோ ரயில் திட்டத்திற்குத் தமிழகத்திற்கு அனுமதி மறுக்கும் மத்திய அரசு, வட மாநிலங்களில் குறைந்த மக்கள் தொகை கொண்ட இடங்களுக்கும் அத்திட்டத்தை வழங்குகிறது. 100 நாள் வேலைத் திட்டத்திற்கான நிதியைக் குறைத்து, அத்திட்டத்தையே முடக்கும் வேலையை மோடி அரசு செய்கிறது.
தூத்துக்குடி மாவட்டத்திற்கான வளர்ச்சித் திட்டங்கள்
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் தூத்துக்குடியில் மட்டும் 3,24,474 பெண்கள் பயன் பெறுகின்றனர். புதுமைப் பெண் திட்டத்தில் 17,108 மாணவிகள் பலன் பெறுகின்றனர். மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் மாவட்டத்தில் 6,80,000 பயனாளிகள். 60,000 பேருக்குப் பட்டா வழங்கப்பட்டுள்ளது; கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் 2,217 வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் 800 கி.மீ. சாலைப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. கோவில்பட்டியில் ரூ.10 கோடியில் மகப்பேறு மருத்துவப் பிரிவு, ஹாக்கி மைதானம் மற்றும் விடுதி பணிகள், கி.ரா மற்றும் வீரமாமுனிவர் மணிமண்டபங்கள். தொகுதிக்கு மட்டும் எம்.பி. நிதியிலிருந்து ரூ.7.12 கோடி ஒதுக்கீடு. பனைப் பொருட்கள் குழுமம் ரூ.430 கோடியில் கூட்டுக்குடிநீர் திட்டம், அரசு கலைக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக் கட்டிடங்கள். தொகுதிக்கு எம்.பி. நிதியிலிருந்து ரூ.4 கோடி ஒதுக்கீடு.
பெண்களுக்குப் பாதுகாப்பு - மாநில ஒப்பீடு
எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த அவர், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பாஜக ஆளும் மாநிலங்களில்தான் அதிகம் எனப் புள்ளிவிவரங்களை வெளியிட்டார்: உத்தரப் பிரதேசம்: 66,381 குற்றங்கள், மகாராஷ்டிரா: 47,101 குற்றங்கள், ராஜஸ்தான்: 45,450 குற்றங்கள், தமிழ்நாடு: 8,943 குற்றங்கள் (பதிவு செய்யப்பட்டவை). தமிழகத்தில் குற்றங்கள் மீது 99% குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
"தன் பதவியைப் பாதுகாத்துக் கொள்ளவே எடப்பாடி பழனிசாமி நினைக்கிறார். நீட் தேர்வு, மின்கட்டண உயர்வுக்கான உதய் மின் திட்டம், விவசாயிகளுக்கு எதிரான சட்டங்கள் என அனைத்தையும் அமைதியாக ஏற்றுக்கொண்டவர் அவர். 2016-ல் அதிமுக அறிவித்த 'இலவச செல்போன்' திட்டம் என்னவானது?" என்று அவர் கேள்வி எழுப்பினார். மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் ஒரே இயக்கம் திமுகதான் எனக்கூறி, உதயசூரியன் சின்னத்திற்கு அவர் வாக்கு சேகரித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் அடித்துக் கொலை : பெண் உட்பட 3 பேர் கைது!
செவ்வாய் 14, ஏப்ரல் 2026 9:27:49 PM (IST)

வீரமரணம் அடைந்த தீயணைப்பு வீரர்களுக்கு நினைவு அஞ்சலி!
செவ்வாய் 14, ஏப்ரல் 2026 4:53:45 PM (IST)

மத்திய அரசின் திட்டங்களைத் திமுக மறைக்கிறது : முதல்வர் ஸ்டாலினுக்கு பாஜக பதில்!
செவ்வாய் 14, ஏப்ரல் 2026 4:42:22 PM (IST)

திருவிக நகர் சக்திபீடத்தில் தமிழ் புத்தாண்டு விழா: விவசாயம் செழிக்க 1008 குங்கும அர்ச்சனை!
செவ்வாய் 14, ஏப்ரல் 2026 3:56:04 PM (IST)

கனிமொழி எம்பி காரில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை: விளாத்திகுளம் அருகே பரபரப்பு!
செவ்வாய் 14, ஏப்ரல் 2026 12:26:51 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ.83.93 லட்சம் பறிமுதல் - ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்
செவ்வாய் 14, ஏப்ரல் 2026 12:07:15 PM (IST)







inbaApr 14, 2026 - 09:32:20 PM | Posted IP 172.7*****