» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருவிக நகர் சக்திபீடத்தில் தமிழ் புத்தாண்டு விழா: விவசாயம் செழிக்க 1008 குங்கும அர்ச்சனை!
செவ்வாய் 14, ஏப்ரல் 2026 3:56:04 PM (IST)

தூத்துக்குடி திருவிக நகர் சக்திபீடத்தில் தமிழ் புத்தாண்டையொட்டி விவசாயம் செழிக்க 1008 குங்கும அர்ச்சனை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
மேல்மருவத்தூர் ஆன்மிககுரு அருள்திரு பங்காரு அடிகளார் அம்மா அவர்களின் அருளாசியுடன் தூத்துக்குடி 3வது மைல் அருகே உள்ள திருவிக நகர் சக்திபீடத்தில் ஸ்ரீபராபவ தமிழ் புத்தாண்டு விழாவையொட்டி விவசாயம் செழிக்கவும், மழை வளம் வேண்டியும், இயற்கை சீற்றம் தணியவும், மக்கள் நலமுடன் வாழவும் வேண்டி 108, 1008 தமிழ் மந்திரங்கள் கூறி குங்கும அர்ச்சனை செய்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அன்னை ஆதிபராசக்திக்கு கனிகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.இதனைத்தொடர்ந்து குரு வழிபாடு நடைபெற்றது. புத்தாண்டு விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு படிக்காசு வழங்கும் நிகழ்ச்சியை மாவட்ட ஆன்மிக இயக்க தலைமை ஒருங்கிணப்பாளர் சக்தி.ஆர்.முருகன் தொடங்கி வைத்தார். அன்னதானம் வழங்கும் நிகழ்சியை சக்திபீட செயலாளர் கந்தசாமி தொடங்கி வைத்தார்.
விழாவில், சக்திபீட துணைத்தலைவர் திருஞானம், எட்டையாபுரம் மன்ற பொறுப்பாளர் ராதிகா, மகளிர் அணி பரமேஸ்வரி, புதிய துறைமுகம் பாண்டி, திருவிக நகர் சக்திபீட நிர்வாகிகள் பத்மா, செல்வி, பட்சியம்மாள், காஞ்சனா, அகிலா, அண்ணாநகர் சிவஞானம், முத்துலெட்சுமி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் அடித்துக் கொலை : பெண் உட்பட 3 பேர் கைது!
செவ்வாய் 14, ஏப்ரல் 2026 9:27:49 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சிக்கு திமுகவே காரணம்: கனிமொழி எம்பி பிரச்சாரம்!
செவ்வாய் 14, ஏப்ரல் 2026 5:13:07 PM (IST)

வீரமரணம் அடைந்த தீயணைப்பு வீரர்களுக்கு நினைவு அஞ்சலி!
செவ்வாய் 14, ஏப்ரல் 2026 4:53:45 PM (IST)

மத்திய அரசின் திட்டங்களைத் திமுக மறைக்கிறது : முதல்வர் ஸ்டாலினுக்கு பாஜக பதில்!
செவ்வாய் 14, ஏப்ரல் 2026 4:42:22 PM (IST)

கனிமொழி எம்பி காரில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை: விளாத்திகுளம் அருகே பரபரப்பு!
செவ்வாய் 14, ஏப்ரல் 2026 12:26:51 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ.83.93 லட்சம் பறிமுதல் - ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்
செவ்வாய் 14, ஏப்ரல் 2026 12:07:15 PM (IST)






