» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சாலையில் கிடந்த மணி பர்ஸை காவல்துறையிடம் ஒப்படைத்த சிறுவர்கள்: பாராட்டுக்கள் குவிகிறது!
திங்கள் 13, ஏப்ரல் 2026 10:22:07 AM (IST)

ஆத்தூரில் சாலையில் சிதறி கிடந்த பணத்துடன் கூடிய மணி பர்ஸை எடுத்து, உரியவர்களிடம் ஒப்படைக்க காவல்துறையிடம் வழங்கிய சிறுவர்களின் நேர்மை பொதுமக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் சோமநாதர் கோயில் தேர் அருகே, நேற்று சுமார் ரூ. 3,600 ரொக்கப் பணம் இருந்த கருப்பு நிற மணி பர்ஸ் ஒன்று கீழே விழுந்து கிடந்துள்ளது. அவ்வழியாகச் சென்ற முகமது இர்பான் (14), அமர்ஜெர்ரி (12), பிரஜித் (14) மற்றும் திலீப்குமார் (14) ஆகிய நான்கு சிறுவர்கள் அந்தப் பையை எடுத்துள்ளனர்.
பணத்தைக் கண்டெடுத்த சிறுவர்கள், சற்றும் தாமதிக்காமல் அதனை ஆத்தூர் காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். அங்கு பணியில் இருந்த காவல் ஆய்வாளர் பிரபாகரனிடம் அந்தப் பணப் பையை ஒப்படைத்தனர். சிறுவர்களின் இந்த உயரிய பண்பையும், நேர்மையையும் கண்டு வியந்த ஆய்வாளர், அவர்களுக்குத் தனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொண்டார்.
தற்காலச் சூழலில் சிறுவர்களின் இந்த நேர்மையான செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சமூக வலைத்தளங்களிலும் இந்தச் சிறுவர்களுக்குப் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மே 6ஆம் தேதி வாக்கு எண்ணும் பணி: வருவாய்த்துறை அலுவலர்களுடன் ஆட்சியர் ஆலோசனை
சனி 2, மே 2026 5:03:13 PM (IST)

தூத்துக்குடியில் புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளி: மத்திய கல்வி அமைச்சகம் ஒப்புதல்
சனி 2, மே 2026 4:27:08 PM (IST)

முத்தாலங்குறிச்சி லட்சுமி நரசிம்மர் ஆலயத்தில் நரசிம்ம ஜெயந்தி விழா
சனி 2, மே 2026 3:12:08 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 5 மையங்களில் நாளை நீட் தேர்வு: மாணவர்களுக்கு முக்கிய அறிவுரைகள்!
சனி 2, மே 2026 12:45:41 PM (IST)

திருச்செந்தூரில் 70 அடி தூரத்திற்கு உள்வாங்கிய கடல்: பக்தர்கள் எச்சரிக்கையுடன் நீராட அறிவுறுத்தல்
சனி 2, மே 2026 11:23:43 AM (IST)

பங்க் ஊழியர் அசந்த நேரத்தில் கைவரிசை: 17லி பெட்ரோல், செல்போன்களைத் திருடிய மர்ம நபர்கள்!
சனி 2, மே 2026 10:43:59 AM (IST)










சங்கரன்Apr 13, 2026 - 11:47:52 AM | Posted IP 104.2*****