» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
இலவசங்கள் வேண்டாம்; தற்சார்பு வாழ்வே இலக்கு: தூத்துக்குடியில் சீமான் பிரசாரம்
சனி 11, ஏப்ரல் 2026 8:18:29 AM (IST)

"தமிழர்கள் தன்மானத்தோடும் தற்சார்புடனும் வாழ வழிவகை செய்வேன்" என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தூத்துக்குடியில் பிரச்சாரம் செய்தார்.
தூத்துக்குடி அண்ணா நகரில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற பிரம்மாண்ட பிரசாரக் கூட்டத்தில் சீமான் கலந்துகொண்டார். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அக்கட்சி வேட்பாளர்கள் இரா. ஜேக்கப் தேவதாஸ் அபிஷேக் (தூத்துக்குடி), பாண்டி (கோவில்பட்டி), சண்முகசுந்தரம் (ஸ்ரீவைகுண்டம்), அனுசியா (ஓட்டப்பிடாரம்), ஒபிலியா (திருச்செந்தூர்), பாலாஜி ராமச்சந்திரன் (விளாத்திகுளம்) ஆகியோரை ஆதரித்து அவர் வாக்கு சேகரித்தார்.
பிரசாரத்தில் சீமான் பேசியதாவது: நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள் மற்றும் மீனவர்கள் அரசு ஊழியர்களாக்கப்படுவர். மீனவர்களுக்கு ஆயிரக்கணக்கான படகுகள் வழங்கப்பட்டு, மீன் சந்தைகள் மற்றும் குளிர்பதனக் கிடங்குகள் அமைக்கப்படும். 'நெய்தல் அங்காடி' மற்றும் 'மீனவர் வைப்பகம்' உருவாக்கப்படும்.
பனைத் தொழிலை மேம்படுத்த கள் இறக்க அனுமதி அளிக்கப்படும். இலவசங்களை வழங்க மாட்டேன். மாறாக, அனைவருக்கும் சமமான தரமான கல்வி, மருத்துவம், சுத்தமான குடிநீர் மற்றும் வேலைவாய்ப்பை உறுதி செய்வேன். இதன் மூலம் மக்கள் தங்களுக்குத் தேவையானவற்றைத் தாங்களே வாங்கிக்கொள்ளும் பொருளாதாரத் திறனைப் பெறுவார்கள்.
தூத்துக்குடியில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்துப் பேசிய அவர், "அநீதியை எதிர்த்துப் போராடி வெற்றி கண்டதுதான் இந்த மண்ணின் சிறப்பு. ஆனால், துப்பாக்கிச் சூடு நடத்திய போலீசாருக்குப் பதவி உயர்வு வழங்கி அரசு அழகு பார்க்கிறது" எனக் குற்றம் சாட்டினார்.

மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து, அவர்களைத் தற்சார்பு வாழ்வு வாழ வைக்கத் துடிக்கும் 'ஏர் சுமக்கும் உழவர்' சின்னத்திற்கு ஆதரவு தருமாறு அவர் மக்களிடம் கேட்டுக்கொண்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் விஷு மகாஜன் ஆய்வு!
வியாழன் 30, ஏப்ரல் 2026 8:23:15 PM (IST)

தொழிற்சாலையில் மின்சாரம் தாக்கி ஊழியர் உயிரிழப்பு!
வியாழன் 30, ஏப்ரல் 2026 8:16:58 PM (IST)

தூத்துக்குடியில் டயர் வெடித்து மின் கம்பத்தில் கார் மோதி விபத்து – 4 பேர் காயங்களுடன் உயிர் தப்பினர்!
வியாழன் 30, ஏப்ரல் 2026 7:53:41 PM (IST)

திருச்செந்தூர் கோவிலில் எடப்பாடி பழனிசாமி குடும்பத்தினர் சிறப்பு வழிபாடு!
வியாழன் 30, ஏப்ரல் 2026 4:26:03 PM (IST)

தந்தை - மகன் கொலை வழக்கு: தூக்கு தண்டனை பெற்ற போலீசாருக்கு உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு
வியாழன் 30, ஏப்ரல் 2026 3:51:41 PM (IST)

தூத்துக்குடியில் நரசிம்மர் ஜெயந்தி விழா கோலாகலம் : சிறப்பு அபிஷேகம் - திரளான பக்தர்கள் தரிசனம்!
வியாழன் 30, ஏப்ரல் 2026 3:17:46 PM (IST)









