» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தொழிற்சாலையில் மின்சாரம் தாக்கி ஊழியர் உயிரிழப்பு!
வியாழன் 30, ஏப்ரல் 2026 8:16:58 PM (IST)
தூத்துக்குடியில் தனியார் தொழிற்சாலையில் பணியில் இருந்தபோது மின்சாரம் தாக்கியதில், திருப்பூரைச் சேர்ந்த ஊழியர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திருப்பூர் மாவட்டம் பெரியபாளையத்தைச் சேர்ந்த சிவா என்பவரின் மகன் பிரசாந்த் (26). இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பயிற்சி ஊழியராக பணியாற்றி வந்தார். நேற்று இரவு சுமார் 8 மணி அளவில் ஆலையில் உள்ள பிளான்ட் பகுதியில் பிரசாந்த் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்குள்ள 'ட்ரிப் போர்டில்' எதிர்பாராத விதமாக மின் கசிவு ஏற்பட்டுள்ளது.
இதில் பிரசாந்த் மீது மின்சாரம் பயங்கரமாகப் பாய்ந்ததில், அவர் தூக்கி வீசப்பட்டு மயக்கமடைந்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள், அவரை உடனடியாக மீட்டு தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரசாந்த் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து முத்தையாபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் விஷு மகாஜன் ஆய்வு!
வியாழன் 30, ஏப்ரல் 2026 8:23:15 PM (IST)

தூத்துக்குடியில் டயர் வெடித்து மின் கம்பத்தில் கார் மோதி விபத்து – 4 பேர் காயங்களுடன் உயிர் தப்பினர்!
வியாழன் 30, ஏப்ரல் 2026 7:53:41 PM (IST)

திருச்செந்தூர் கோவிலில் எடப்பாடி பழனிசாமி குடும்பத்தினர் சிறப்பு வழிபாடு!
வியாழன் 30, ஏப்ரல் 2026 4:26:03 PM (IST)

தந்தை - மகன் கொலை வழக்கு: தூக்கு தண்டனை பெற்ற போலீசாருக்கு உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு
வியாழன் 30, ஏப்ரல் 2026 3:51:41 PM (IST)

தூத்துக்குடியில் நரசிம்மர் ஜெயந்தி விழா கோலாகலம் : சிறப்பு அபிஷேகம் - திரளான பக்தர்கள் தரிசனம்!
வியாழன் 30, ஏப்ரல் 2026 3:17:46 PM (IST)

ஆர்டிஇ மாணவர் சேர்க்கை: சான்றிதழ்களை விரைந்து வழங்க ஆட்சியருக்கு பொதுமக்கள் கோரிக்கை!
வியாழன் 30, ஏப்ரல் 2026 12:38:07 PM (IST)









