» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் நரசிம்மர் ஜெயந்தி விழா கோலாகலம் : சிறப்பு அபிஷேகம் - திரளான பக்தர்கள் தரிசனம்!
வியாழன் 30, ஏப்ரல் 2026 3:17:46 PM (IST)

தூத்துக்குடி கதிர்வேல் நகர், ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் நரசிம்மர் ஜெயந்தி விழா இன்று மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
மகாவிஷ்ணுவின் நான்காவது அவதாரமான நரசிம்ம அவதாரத்திற்கு "நாளை" என்பது கிடையாது. தன் பக்தன் பிரகலாதனைத் துயரத்திலிருந்து காக்க, தாயின் கருவில் இருந்து தோன்றினால் காலதாமதம் ஆகும் என்பதால், ஒரு நொடியும் தாமதிக்காமல் தூணிலிருந்து உடனடியாகத் தோன்றியவர் நரசிம்மர். இதன் காரணமாகவே, ஆண்டுதோறும் சித்திரை மாதம் சுவாதி நட்சத்திரத்தன்று நரசிம்மர் ஜெயந்தி விழா பக்தர்களால் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
"நரசிம்மரை வழிபட்டால் எந்தவொரு காரியமும் தங்கு தடையின்றி உடனடியாக நிறைவேறும்" என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. தமிழகத்திலேயே நரசிம்மருக்குத் தனிச் சன்னதி அமைந்துள்ள அபூர்வத் தலங்களில் ஒன்றான தூத்துக்குடி கதிர்வேல் நகர், ராதாகிருஷ்ணா ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் நரசிம்மர் ஜெயந்தி விழா இன்று மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
நரசிம்மர் ஜெயந்தியை முன்னிட்டு, இன்று அதிகாலையில் கணபதி ஹோமம் மற்றும் நரசிம்மர் ஹோமத்துடன் பூஜைகள் தொடங்கின. சுவாமிக்கு விசேஷ திரவியங்களால் கலச அபிஷேகம் நடைபெற்றது.நண்பகல் வேளையில் நடைபெற்ற மகா தீபாராதனையில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு "கோவிந்தா" கோஷத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.
விழாவின் ஒரு பகுதியாகச் சிறப்புச் சங்கீர்த்தனம் மற்றும் பஜனை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் பங்கேற்ற பக்தர்களுக்குப் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. விழாவிற்கான ஏற்பாடுகளைக் கோவில் நிர்வாகத்தினர் மற்றும் கதிர்வேல் நகர் பகுதி பொதுமக்கள் சிறப்பாகச் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் விஷு மகாஜன் ஆய்வு!
வியாழன் 30, ஏப்ரல் 2026 8:23:15 PM (IST)

தொழிற்சாலையில் மின்சாரம் தாக்கி ஊழியர் உயிரிழப்பு!
வியாழன் 30, ஏப்ரல் 2026 8:16:58 PM (IST)

தூத்துக்குடியில் டயர் வெடித்து மின் கம்பத்தில் கார் மோதி விபத்து – 4 பேர் காயங்களுடன் உயிர் தப்பினர்!
வியாழன் 30, ஏப்ரல் 2026 7:53:41 PM (IST)

திருச்செந்தூர் கோவிலில் எடப்பாடி பழனிசாமி குடும்பத்தினர் சிறப்பு வழிபாடு!
வியாழன் 30, ஏப்ரல் 2026 4:26:03 PM (IST)

தந்தை - மகன் கொலை வழக்கு: தூக்கு தண்டனை பெற்ற போலீசாருக்கு உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு
வியாழன் 30, ஏப்ரல் 2026 3:51:41 PM (IST)

ஆர்டிஇ மாணவர் சேர்க்கை: சான்றிதழ்களை விரைந்து வழங்க ஆட்சியருக்கு பொதுமக்கள் கோரிக்கை!
வியாழன் 30, ஏப்ரல் 2026 12:38:07 PM (IST)









