» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் விஷு மகாஜன் ஆய்வு!
வியாழன் 30, ஏப்ரல் 2026 8:23:15 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று முடிந்த 2026-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடு பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் இன்று (30.04.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் வாக்கு எண்ணும் மையமாக அண்ணா பல்கலைக்கழகத்தின் (தூத்துக்குடி வளாகம்) வ.உ.சி. அரசு பொறியியல் கல்லூரி தேர்வு செய்யப்பட்டுள்ளது. அங்கு தொகுதி வாரியாக மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு கட்டமைப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகளை ஆட்சியர் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது வாக்கு எண்ணும் அறைகளில் செய்யப்பட்டுள்ள மேஜை மற்றும் இருக்கை வசதிகள், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களைப் பாதுகாப்பாகக் கொண்டு வருவதற்கான வழித்தடங்கள், முகவர்கள் மற்றும் அலுவலர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், தடையற்ற மின்சாரம் மற்றும் இணையதள வசதிகள் ஆகியவை குறித்து ஆட்சியர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
வாக்கு எண்ணிக்கை வரும் மே 4-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், வாக்கு எண்ணும் மையத்தில் ஏற்கனவே மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. துணை ராணுவப் படையினர் மற்றும் காவல்துறையினர் 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள சூழலில், இன்றைய ஆய்வின் போது பணிகளைத் திட்டமிட்டபடி விரைந்து முடிக்க ஆட்சியர் அறிவுறுத்தினார். ஆய்வின் போது வருவாய்த் துறை மற்றும் தேர்தல் பிரிவு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தொழிற்சாலையில் மின்சாரம் தாக்கி ஊழியர் உயிரிழப்பு!
வியாழன் 30, ஏப்ரல் 2026 8:16:58 PM (IST)

தூத்துக்குடியில் டயர் வெடித்து மின் கம்பத்தில் கார் மோதி விபத்து – 4 பேர் காயங்களுடன் உயிர் தப்பினர்!
வியாழன் 30, ஏப்ரல் 2026 7:53:41 PM (IST)

திருச்செந்தூர் கோவிலில் எடப்பாடி பழனிசாமி குடும்பத்தினர் சிறப்பு வழிபாடு!
வியாழன் 30, ஏப்ரல் 2026 4:26:03 PM (IST)

தந்தை - மகன் கொலை வழக்கு: தூக்கு தண்டனை பெற்ற போலீசாருக்கு உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு
வியாழன் 30, ஏப்ரல் 2026 3:51:41 PM (IST)

தூத்துக்குடியில் நரசிம்மர் ஜெயந்தி விழா கோலாகலம் : சிறப்பு அபிஷேகம் - திரளான பக்தர்கள் தரிசனம்!
வியாழன் 30, ஏப்ரல் 2026 3:17:46 PM (IST)

ஆர்டிஇ மாணவர் சேர்க்கை: சான்றிதழ்களை விரைந்து வழங்க ஆட்சியருக்கு பொதுமக்கள் கோரிக்கை!
வியாழன் 30, ஏப்ரல் 2026 12:38:07 PM (IST)









