» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் உலக வகைப்பாட்டியலாளர்கள் தின விழா!

புதன் 18, மார்ச் 2026 8:57:51 PM (IST)



தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், மீன்வள உயிரியல் மற்றும் வளமேலாண்மைத் துறையின் சார்பில் 'உலக வகைப்பாட்டியலாளர்கள் ஊக்குவிப்பு தினம் கொண்டாடப்பட்டது.

மீன்வள உயிரியல் மற்றும் வளமேலாண்மைத் துறைத் தலைவர் ரா. துரைராஜா வரவேற்புரை வழங்கினார். கல்லூரி முதல்வர் (பொறுப்பு) ச.அ. சண்முகம் தலைமையுரை ஆற்றி, வகைப்பாட்டியலின் முக்கியத்துவம் மற்றும் அந்தத் துறையில் விஞ்ஞானிகளை ஊக்குவிக்க வேண்டியதன் அவசியம் குறித்து விளக்கினார். கல்லூரியின் முன்னாள் முதல்வரும், சார்பு பேராசிரியருமான வி.கே. வெங்கடரமணி, பாரம்பரிய மற்றும் நவீன மீன் வகைப்பாட்டியல் முறைகள் குறித்துச் சிறப்புரை ஆற்றினார். 

மேலும், அரிஸ்டாட்டில் முதல் லின்னேயஸ் வரையிலான அறிஞர்களின் சாதனைகளையும், அழிந்து வரும் நீர்வாழ் உயிரினங்கள் குறித்தும் அவர் எடுத்துரைத்தார். மண்டபம் மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தின் (ICAR-CMFRI) முதுநிலை விஞ்ஞானி இரா. சரவணன் இணைய வழியாகக் கலந்து கொண்டு, ஜெல்லி மீன், கடல் வெள்ளரி போன்ற புறக்கணிக்கப்பட்ட கடல்வாழ் உயிரினங்களின் வகைப்பாட்டியல் மற்றும் அவற்றின் சூழலியல் முக்கியத்துவம் குறித்து விளக்கினார்.

விழாவில் இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்ட மாணவர்கள், பேராசிரியர்கள் என மொத்தம் 116 பேர் கலந்துகொண்டனர். முனைவர் பட்ட மாணவி மா. சாருமதி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். உதவிப் பேராசிரியர் க. கருப்பசாமி நன்றியுரை ஆற்றினார். சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு காரல் லின்னேயஸ் உருவாக்கிய இருசொற் பெயரிடும் முறையே இன்றும் உயிரினங்களை அடையாளம் காணப் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital





Thoothukudi Business Directory