» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் உலக நுகர்வோர் உரிமை தின விழா
புதன் 18, மார்ச் 2026 3:20:31 PM (IST)

மாணவர் சமுதாயம் நுகர்வோர் விழிப்புணர்வு பெற்றால் மட்டுமே சமுதாயத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று எம்பவர் இந்தியா செயல் இயக்குனர் ஆ. சங்கர் பேசினார்.
தூத்துக்குடியில் உள்ள புனித மரியன்னை கல்லூரியில், 'எம்பவர் இந்தியா நுகர்வோர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நடுவம்' மற்றும் 'புனித மரியன்னை கல்லூரி' ஆகியவை இணைந்து உலக நுகர்வோர் உரிமைகள் தின விழாவை நடத்தின. விழாவையொட்டி நுகர்வோர் விழிப்புணர்வு பதாகையை கல்லூரி முதல்வர் ஜெசி பெர்னாண்டோ வெளியிட, அதன் முதல் பிரதியை எம்பவர் இந்தியா செயல் இயக்குனர் ஆ. சங்கர் பெற்றுக்கொண்டார்.
விழாவில் எம்பவர் இந்தியா செயல் இயக்குனர் ஆ. சங்கர் பேசுகையில், "பொருட்கள் மற்றும் சேவைகளில் குறைபாடுகள் ஏற்படும் போது, நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் மூலம் உரிய நிவாரணம் பெற முடியும். நுகர்வோருக்கு 'பில்' (Bill) தான் மிகப்பெரிய ஆயுதம். எனவே, நாம் வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும் முறையான பில்லை கேட்டுப் பெற வேண்டும்.
சேவையிலோ அல்லது பொருட்களின் தரத்திலோ குறைபாடுகள் இருந்தால், நுகர்வோர் மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான நுகர்வோர் குறைதீர் ஆணையங்களை அணுகி நீதி பெறலாம். பொதுமக்கள் மத்தியில் நுகர்வோர் விழிப்புணர்வை ஏற்படுத்த மாணவர்கள் அனைவரும் முன்வர வேண்டும் என்றார்.
தொடர்ந்து, எரிவாயு சிலிண்டர்களை (LPG) எவ்வாறு பாதுகாப்பாகக் கையாள்வது மற்றும் சிக்கனமாகப் பயன்படுத்துவது என்பது குறித்து மாணவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை புனித மரியன்னை கல்லூரி குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் ரதி மற்றும் எம்பவர் இந்தியா மேலாளர் லலிதாம்பிகை ஆகியோர் செய்திருந்தனர். இதில் கல்லூரியின் பேராசிரியர்கள் மற்றும் திரளான மாணவ-மாணவியர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

முதல்முறை வாக்காளர்கள் எதற்கும் அடிபணியாமல் வாக்களிக்க வேண்டும்: ஆட்சியர் அறிவுறுத்தல்!
புதன் 18, மார்ச் 2026 4:06:13 PM (IST)

வாட்ஸ்அப் கேஓய்சி செய்திகளை நம்ப வேண்டாம்: தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி அறிவுறுத்தல்!
புதன் 18, மார்ச் 2026 3:37:06 PM (IST)

தூத்துக்குடி முஸ்லிம் சமுதாய நலச் சங்கம் சார்பில் ரூ. 5 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கல்!
புதன் 18, மார்ச் 2026 3:13:03 PM (IST)

தூத்துக்குடி முன்னை மரத்தடி மாடசாமி கோவில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!
புதன் 18, மார்ச் 2026 3:08:22 PM (IST)

இலக்கையும் கடந்து வெற்றி பெறுவோம்: இப்தார் விழாவில் அமைச்சர் கீதா ஜீவன் பேச்சு!
புதன் 18, மார்ச் 2026 12:16:21 PM (IST)

தமிழக அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மாணவ, மாணவியருக்கு அழைப்பு!
புதன் 18, மார்ச் 2026 11:41:05 AM (IST)








