» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி முன்னை மரத்தடி மாடசாமி கோவில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!

புதன் 18, மார்ச் 2026 3:08:22 PM (IST)

தூத்துக்குடி பெருமாள் கோவில் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மாடத்தி அம்பாள் சமேத முன்னை மரத்தடி மாடசாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேகப் பெருவிழா இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

இக்கோவிலின் நூதன விமான யந்திர சாந்நித்திய திரிபந்தன மகா கும்பாபிஷேக விழா கடந்த 17-ஆம் தேதி மாலை தொடங்கியது. விழாவினை முன்னிட்டு, தெப்பக்குளம் சுந்தரபாண்டிய விநாயகர் கோவிலில் இருந்து தேவதா அணுக்கையுடன் தொடங்கி கணபதி ஹோமம் நடைபெற்றது. பின்னர் அங்கிருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டு, முதற்கால யாகசாலை பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெற்றுப் பிரசாதம் வழங்கப்பட்டது.

இன்று (மார்ச் 18) அதிகாலை 5 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் தொடங்கின. அதனைத் தொடர்ந்து பூர்ணாகுதி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக, காலை 9:30 மணிக்கு விமான மகா கும்பாபிஷேகமும், அதனைத் தொடர்ந்து மூலஸ்தான மகா கும்பாபிஷேகமும் சிறப்பாக நடைபெற்றது. பின்னர் சுவாமிக்குச் சிறப்பு மகா அபிஷேகம் மற்றும் அலங்கார மகா தீபாராதனை காட்டப்பட்டது.

இந்த கும்பாபிஷேக விழாவைத் தூத்துக்குடி சிவன் கோவில் பிரதான பட்டர்கள் எம். சங்கர் மற்றும் எம். குமார் ஆகியோர் தலைமையேற்று நடத்தி வைத்தனர். இதில் சிவன் கோவில், பெருமாள் கோவில் மற்றும் மாரியம்மன் கோவில் அறங்காவலர்கள் உள்ளூர் முக்கியப் பிரமுகர்கள் மற்றும் தொழிலதிபர்கள் தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவின் நிறைவாகப் பக்தர்களுக்கு மகா அன்னதானம் வழங்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital




Thoothukudi Business Directory