» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பள்ளி மாணவிக்கு இழைக்கப்பட்ட கொடுமை: நீதி கேட்டு பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!

புதன் 18, மார்ச் 2026 11:12:26 AM (IST)



வேடநத்தம் பள்ளி மாணவிக்கு இழைக்கப்பட்ட பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து தூத்துக்குடி மீளவிட்டான் பகுதியில், பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

தூத்துக்குடி மாவட்டம், வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பு பயின்று வந்த பள்ளி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்து, அவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி யாதவர் சமுதாய மக்கள் சார்பாக மீளவிட்டான் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் கல்நது கொண்டு பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்திற்கு உரிய நீதி கிடைக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital







Thoothukudi Business Directory