» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நான் முதல்வன் திட்டம்: ஜப்பானில் பயிற்சி பெற சாத்தான்குளம் அரசு கல்லூரி மாணவி தேர்வு!
புதன் 18, மார்ச் 2026 10:38:40 AM (IST)
தமிழக அரசின் 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ், ஜப்பான் நாட்டில் நடைபெறவுள்ள உயர்தரப் பயிற்சியில் பங்கேற்க சாத்தான்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கணினி அறிவியல் துறையில் பயின்று வரும் மாணவி அகஸ்டா, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் (TNSDC) நடத்திய சிறப்புப் பயிற்சியில் பங்கேற்றார். இதில் இவரது சிறப்பான செயல்பாட்டைக் கருத்தில் கொண்டு, சிறந்த இளங்கலை திறமையாளர்களுக்கான (SCOUT-TN) திட்டத்தின் கீழ் ஜப்பான் நாட்டிற்குச் சென்று இரண்டு வார காலப் பயிற்சி பெறத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்தத் திட்டத்தின் மூலம், வரும் மார்ச் 15 முதல் மார்ச் 27 வரை ஜப்பானில் நடைபெறும் நவீனத் தொழில்நுட்பப் பயிற்சிகளில் மாணவி அகஸ்டா கலந்துகொள்கிறார். சர்வதேச அளவில் நடைபெறும் இந்தப் பயிற்சியில் பங்கேற்கத் தேர்வானது கல்லூரிக்கும் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளது.
ஜப்பான் செல்லத் தேர்வான மாணவியைப் பாராட்டி வழியனுப்பும் நிகழ்ச்சி கல்லூரியில் நடைபெற்றது. கல்லூரிப் பொறுப்பு முதல்வர் ஜோசப் சுரேஷ் மற்றும் மூத்த பேராசிரியர் ஜமுனா ராணி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கணினி அறிவியல் துறைத் தலைவர் மற்றும் பேராசிரியர்கள், அனைத்துத் துறைத் தலைவர்கள் மற்றும் ஆசிரியர்கள், சக மாணவிகள் கலந்துகொண்டு மாணவி அகஸ்டாவிற்கு வாழ்த்துகளைத் தெரிவித்து உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாட்ஸ்அப் கேஓய்சி செய்திகளை நம்ப வேண்டாம்: தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி அறிவுறுத்தல்!
புதன் 18, மார்ச் 2026 3:37:06 PM (IST)

தூத்துக்குடியில் உலக நுகர்வோர் உரிமை தின விழா
புதன் 18, மார்ச் 2026 3:20:31 PM (IST)

தூத்துக்குடி முஸ்லிம் சமுதாய நலச் சங்கம் சார்பில் ரூ. 5 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கல்!
புதன் 18, மார்ச் 2026 3:13:03 PM (IST)

இலக்கையும் கடந்து வெற்றி பெறுவோம்: இப்தார் விழாவில் அமைச்சர் கீதா ஜீவன் பேச்சு!
புதன் 18, மார்ச் 2026 12:16:21 PM (IST)

தமிழக அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மாணவ, மாணவியருக்கு அழைப்பு!
புதன் 18, மார்ச் 2026 11:41:05 AM (IST)

பள்ளி மாணவிக்கு இழைக்கப்பட்ட கொடுமை: நீதி கேட்டு பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!
புதன் 18, மார்ச் 2026 11:12:26 AM (IST)








