» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு

புதன் 18, மார்ச் 2026 8:36:39 PM (IST)

சாத்தான்குளம் அருகே கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கில், குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழ பனைக்குளம் பகுதியில், கடந்த 2021-ம் ஆண்டு முன்விரோதம் காரணமாக யோவான் அற்புதராஜ் (35) என்பவர் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த செல்லத்துரை (65) என்பவர் மீது சாத்தான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி தாண்டவம், குற்றம் சாட்டப்பட்ட செல்லத்துரை என்பவரை குற்றவாளி என உறுதி செய்து, அவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதம் விதித்து இன்று (18.03.2026) தீர்ப்பளித்தார்.

வழக்கைச் சிறப்பாகப் புலனாய்வு செய்த அப்போதைய ஆய்வாளர் பெர்னார்டு சேவியர், சாட்சிகளைச் சரியாக ஆஜர்ப்படுத்திய டி.எஸ்.பி ஆவுடையப்பன், திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் ஆனந்த் கேப்ரியல் ராஜ் மற்றும் உதவியாக இருந்த தலைமை காவலர் ராஜேந்திரன் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி. மதன் பாராட்டினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 2026-ம் ஆண்டில் மட்டும் இதுவரை மொத்தம் 8 கொலை வழக்குகளில் குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital







Thoothukudi Business Directory