» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கொல்லங்கோடு பத்திரக்காளி அம்மன் கோயில் திருவிழா: மார்ச் 22-ல் மதுபானக் கடைகள் மூட உத்தரவு
புதன் 18, மார்ச் 2026 12:31:24 PM (IST)
கொல்லங்கோடு பத்திரக்காளி அம்மன் கோயில் தூக்கத் திருவிழாவை முன்னிட்டு வருகிற மார்ச் 22-ஆம் தேதி மதுபானக் கடைகளை மூட ஆட்சியர் அழகுமீனா உத்தரவிட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோடு அருள்மிகு பத்திரக்காளி அம்மன் ஆலயத்தில் உலகப்புகழ் பெற்ற தூக்கத் திருவிழா வரும் மார்ச் 22-ம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பாதுகாப்பு மற்றும் சட்டம்-ஒழுங்கைப் பராமரிக்கும் வகையில், அன்றைய தினம் அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள மதுபானக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் அழகுமீனா உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) விதிகள் 2003, பிரிவு 12(2)-ன் கீழ் மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி, திருவிழா நடைபெறும் கொல்லங்கோடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் மார்ச் 22, 2026 அன்று இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மார்ச் 22-ஆம் தேதி அன்று நித்திரவிளை, கொல்லங்கோடு, நடைக்காவு, ஊரம்பு ஆகிய இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகள் மற்றும் கொல்லங்கோட்டில் இயங்கி வரும் 'ஹோட்டல் ஒயாசிஸ் இன்டர்நேஷனல்' மதுபான பார் ஆகியவற்றை முழுமையாக அடைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறிச் செயல்படுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாட்ஸ்அப் கேஓய்சி செய்திகளை நம்ப வேண்டாம்: தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி அறிவுறுத்தல்!
புதன் 18, மார்ச் 2026 3:37:06 PM (IST)

தூத்துக்குடியில் உலக நுகர்வோர் உரிமை தின விழா
புதன் 18, மார்ச் 2026 3:20:31 PM (IST)

தூத்துக்குடி முஸ்லிம் சமுதாய நலச் சங்கம் சார்பில் ரூ. 5 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கல்!
புதன் 18, மார்ச் 2026 3:13:03 PM (IST)

இலக்கையும் கடந்து வெற்றி பெறுவோம்: இப்தார் விழாவில் அமைச்சர் கீதா ஜீவன் பேச்சு!
புதன் 18, மார்ச் 2026 12:16:21 PM (IST)

தமிழக அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மாணவ, மாணவியருக்கு அழைப்பு!
புதன் 18, மார்ச் 2026 11:41:05 AM (IST)

பள்ளி மாணவிக்கு இழைக்கப்பட்ட கொடுமை: நீதி கேட்டு பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!
புதன் 18, மார்ச் 2026 11:12:26 AM (IST)








