» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை - மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு
திங்கள் 16, மார்ச் 2026 4:50:56 PM (IST)
வீட்டிற்குள் நுழைந்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்து, கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அரகே கவர்னகிரி சித்திரை வீதியைச் சேர்ந்த காசி மகன் தமிழழகன் (55) என்பவர் கடந்த 14.10.2020 அன்று வீட்டிற்குள் நுழைந்து பெண்ணுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து புகாரின் பேரில் கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் அப்போதைய ஆய்வாளர் மாரியம்மாள் விசாரணை நடத்தி, தமிழழகன் மீது வழக்கு பதிவு செய்தார். இந்த வழக்கு தூத்துக்குடி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கின் சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்களை ஆய்வு செய்த நீதிபதி முருகன், தமிழழகன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதையடுத்து அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 5,000 ரூபாய் அபராதம். அபராதத்தைச் செலுத்தத் தவறினால் கூடுதலாக ஒரு ஆண்டு சாதாரண சிறை தண்டனை.
பிரிவு 376 உடன் இணைந்த 511-ன் கீழ் 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 5,000 ரூபாய் அபராதம். அபராதத்தைச் செலுத்தத் தவறினால் கூடுதலாக ஒரு ஆண்டு சாதாரண சிறை தண்டனை. இந்த இரண்டு தண்டனைகளையும் குற்றவாளி ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என நீதிபதி தனது தீர்ப்பில் உத்தரவிட்டார். இதன் மூலம் குற்றவாளிக்கு மொத்தம் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், மொத்தம் 10,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில் அரசுத் தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் எல்லம்மாள் ஆஜராகி வாதாடினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் டிரான்ஸ்பார்மர் வெடித்து தீ விபத்து: இருசக்கர வாகனம் எரிந்து சாம்பல்!
திங்கள் 16, மார்ச் 2026 8:25:46 PM (IST)

தூத்துக்குடியில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை: காரில் ரூ.4.50 லட்சம் பறிமுதல்!
திங்கள் 16, மார்ச் 2026 8:02:37 PM (IST)

சட்டமன்றத் தேர்தல்: அரசியல் கட்சிகள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் - ஆட்சியர் அறிவுறுத்தல்!
திங்கள் 16, மார்ச் 2026 4:19:25 PM (IST)

மாணவி வழக்கில் 5 பேரிடம் டிஎன்ஏ சோதனை: போலீஸ் மீது நடவடிக்கை - உயர்நீதிமன்றம் உத்தரவு
திங்கள் 16, மார்ச் 2026 3:46:56 PM (IST)

துப்பாக்கிகளை ஒப்படைக்க வேண்டும்: ஆட்சியர் உத்தரவு!
திங்கள் 16, மார்ச் 2026 3:30:58 PM (IST)

மார்ச் 18-ஆம் தேதி தூத்துக்குடி மாவட்ட வேட்பாளர்கள் நேர்காணல்: தி.மு.க. தலைமை அறிவிப்பு
திங்கள் 16, மார்ச் 2026 3:11:40 PM (IST)








