» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

துப்பாக்கிகளை ஒப்படைக்க வேண்டும்: ஆட்சியர் உத்தரவு!

திங்கள் 16, மார்ச் 2026 3:30:58 PM (IST)

சட்டமன்றப் பொதுத்தேர்தல் விதிகள் அமலில் உள்ளதால் படைக்கலன்களை வைத்திருப்பவர்கள், அவற்றை உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான க. இளம்பகவத்,  விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், மாவட்டத்தில் அமைதியான முறையிலும் பாதுகாப்பான முறையிலும் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்யும் பொருட்டு தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளன.

இதன் விளைவாக, தூத்துக்குடி மாவட்டத்தில் படைக்கலன் (துப்பாக்கி) உரிமம் பெற்று படைக்கலன்களை வைத்திருப்பவர்கள், அவற்றை உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திலோ அல்லது அங்கீகாரம் பெற்ற படைக்கலன் பாதுகாப்பு கிடங்குகளிலோ (Authorized Arms Dealers) ஒப்படைத்து இருப்பு வைத்திட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தேர்தல் நடைமுறைகள் முடியும் வரை இந்த விதிமுறை நடைமுறையில் இருக்கும் என்றும், உரிமதாரர்கள் அனைவரும் மாவட்ட நிர்வாகத்தின் இந்த பாதுகாப்பு நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital






Thoothukudi Business Directory