» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
காசோலை பரிவர்த்தனையில் கூடுதல் பாதுகாப்பு: தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி புதிய அறிவிப்பு
சனி 14, மார்ச் 2026 5:47:47 PM (IST)
ரூ.5 லட்சம் மற்றும் அதற்கு மேற்பட்ட காசோலைகளுக்கு 'பாசிட்டிவ் பே' முறை கட்டாயம் என்று தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி அறிவித்துள்ளது. இந்த நடைமுறை ஏப்.1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி, காசோலை பரிவர்த்தனைகளை மேலும் பாதுகாப்பானதாக்கும் வகையில், 5 லட்சம் ரூபாய் மற்றும் அதற்கு மேற்பட்ட மதிப்பிலான காசோலைகளுக்கு 'பாசிட்டிவ் பே சிஸ்டம்' (Positive Pay System - PPS) எனும் உறுதிப்படுத்தும் முறையைத் தற்போது கட்டாயமாக்கியுள்ளது.
இது குறித்து வங்கியின் கிளை வங்கிப் பிரிவுக்கான தேசியத் தலைவர் மற்றும் செயல் துணைத் தலைவர் பி.ஆர். அசோக் குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: வங்கியின் வாடிக்கையாளர்கள் கிளியரிங், பணப் பரிமாற்றம் (Transfer), NEFT, RTGS அல்லது ரொக்கம் பெறுவதற்காக 5 லட்சம் ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட தொகைக்கு காசோலைகளை வழங்கும்போது, அதனை வழங்கியவர் (Drawer) வங்கியிடம் முன் கூட்டியே 'பாசிட்டிவ் பே' முறையில் உறுதிப்படுத்த வேண்டும். அவ்வாறு உறுதிப்படுத்தப்படாத காசோலைகள் வங்கியில் ஏற்றுக்கொள்ளப்படாமல் திருப்பி அனுப்பப்படும் (Returned).
பாசிட்டிவ் பே உறுதிப்படுத்துதலுக்குக் கீழ்க்கண்ட அடிப்படை விவரங்களைத் தெரிவிக்க வேண்டும்:
- கணக்கு எண் (Account Number)
- காசோலை எண் (Cheque Number)
- காசோலை தேதி (Cheque Date)
- தொகை (Amount)
- பணம் பெறுபவரின் பெயர் (Payee Name)
வாடிக்கையாளர்கள் தங்களின் காசோலை விவரங்களை வங்கிக்குத் தெரிவிக்கக் கீழ்க்காணும் வசதிகளைப் பயன்படுத்தலாம்:
- டி.எம்.பி (TMB) மொபைல் பேங்கிங் ஆப்
- இணைய வங்கிச் சேவை (Internet Banking)
- டி.எம்.பி டிஜிலாபி (TMB Digilobby)
- வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளம் (Web Portal)
- வங்கியின் கிளை அலுவலகக் கவுண்டர்கள்
விவரங்களைச் சமர்ப்பித்தவுடன், வாடிக்கையாளரின் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு உறுதிப்படுத்தப்பட்டதற்கான மின்னணு ஒப்புகைச் சீட்டு (e-acknowledgement) அனுப்பி வைக்கப்படும்.
இது தொடர்பான கூடுதல் விவரங்கள் அல்லது உதவிகளுக்கு வாடிக்கையாளர்கள் தங்களுக்கு அருகிலுள்ள வங்கி கிளையையோ அல்லது வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையத்தையோ +91 9842 461 461 என்ற எண்ணிலோ, அல்லது 180 0425 0426 என்ற தேசியக் கட்டணமில்லா எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.
காசோலை பரிவர்த்தனைகளைப் பாதுகாப்பான முறையில் மேற்கொள்வதற்கு வாடிக்கையாளர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வங்கி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் டிரான்ஸ்பார்மர் வெடித்து தீ விபத்து: இருசக்கர வாகனம் எரிந்து சாம்பல்!
திங்கள் 16, மார்ச் 2026 8:25:46 PM (IST)

தூத்துக்குடியில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை: காரில் ரூ.4.50 லட்சம் பறிமுதல்!
திங்கள் 16, மார்ச் 2026 8:02:37 PM (IST)

பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை - மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு
திங்கள் 16, மார்ச் 2026 4:50:56 PM (IST)

சட்டமன்றத் தேர்தல்: அரசியல் கட்சிகள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் - ஆட்சியர் அறிவுறுத்தல்!
திங்கள் 16, மார்ச் 2026 4:19:25 PM (IST)

மாணவி வழக்கில் 5 பேரிடம் டிஎன்ஏ சோதனை: போலீஸ் மீது நடவடிக்கை - உயர்நீதிமன்றம் உத்தரவு
திங்கள் 16, மார்ச் 2026 3:46:56 PM (IST)

துப்பாக்கிகளை ஒப்படைக்க வேண்டும்: ஆட்சியர் உத்தரவு!
திங்கள் 16, மார்ச் 2026 3:30:58 PM (IST)









BabuMar 15, 2026 - 09:24:35 AM | Posted IP 172.7*****