» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வீடுபுகுந்து சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை!

சனி 7, மார்ச் 2026 8:29:41 AM (IST)

வீடுபுகுந்து 17 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், இளைஞருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு, நாலாட்டின்புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள வீடுபுகுந்து, 17 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்ததோடு, அவருக்குக் கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டது. இது குறித்துப் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில், கோவில்பட்டியைச் சேர்ந்த வெற்றிசெல்வன் (29) என்பவரைப் போக்ஸோ சட்டத்தின் கீழ் நாலாட்டின்புதூர் போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.

இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி (பொறுப்பு) பிரீத்தா அவர்கள் நேற்று வெற்றிசெல்வன் குற்றவாளி என உறுதி செய்து அத்துமீறி வீடுபுகுந்த குற்றத்திற்காக 7 வருடங்கள் சிறை தண்டனை, ரூபாய் 2500 அபராதமும், பாலியல் வன்கொடுமை குற்றத்திற்காக 20 வருடங்கள் கடுங்காவல் சிறை தண்டனை ரூபாய் 10,000/- அபராதமும், கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்காக 2 ஆண்டுகள் சிறை தண்டனை ரூபாய் 2500 அபராதமும் விதித்து மேற்படி தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார். 

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 5 லட்சம் இழப்பீடு தொகை வழங்கவும் உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கினார்.  இவ்வழக்கின் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்த கோவில்பட்டி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்  ஜெகநாதன் மற்றும் இவ்வழக்கினை திறம்பட புலனாய்வு செய்த அப்போதைய காவல் ஆய்வாளர்  சுகாதேவி, நீதிமன்றத்தில் சிறப்பாக வாதிட்ட சிறப்பு அரசு தரப்பு வழக்கறிஞர்  ஜானகி, வழக்கின் விசாரணைக்கு உதவியாக இருந்த தலைமை காவலர்  சுதா ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி. மதன் பாராட்டினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital






Thoothukudi Business Directory