» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மனைவியைப் பிரிந்த மன வேதனையில் வாலிபர் தற்கொலை: தூத்துக்குடியில் பரிதாபம்!

வெள்ளி 27, பிப்ரவரி 2026 11:47:35 AM (IST)

தூத்துக்குடியில் மனைவி, குழந்தையைப் பிரிந்த மன வேதனையில் இருந்த வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். 

தூத்துக்குடி பாத்திமா நகர் 3-வது தெருவைச் சேர்ந்தவர் அந்தோணி கமல்ராஜ் மகன் லேசிங்டன் கமல்ராஜ் (33). கூலித் தொழிலாளியான இவருக்கு ஷைனி என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த ஓராண்டாக மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வந்த லேசிங்டன் கமல்ராஜ், தனது தந்தை வீட்டில் வசித்து வந்துள்ளார். 

இதனால் அவர் மிகுந்த மன வருத்தத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. நேற்று காலை வீட்டின் கதவு உட்புறமாகப் பூட்டப்பட்டிருந்ததைக் கண்டு சந்தேகமடைந்த குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது லேசிங்டன் கமல்ராஜ் நைலான் கயிற்றால் தூக்கிட்ட நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக அவரை மீட்டு ஆட்டோ மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இது குறித்து லேசிங்டன் கமல்ராஜின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில், தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் திருமுருகன் தலைமையிலான போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital





Thoothukudi Business Directory