» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மாவு மில் உரிமையாளரை வெட்டிய சிறுவனுக்கு ஓராண்டு சிறை தண்டனை!

வெள்ளி 27, பிப்ரவரி 2026 8:41:23 PM (IST)

ஸ்ரீவைகுண்டத்தில் மாவு மில் உரிமையாளரை அரிவாளால் வெட்டிய வழக்கில், இளஞ்சிறார் ஒருவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து இளஞ்சிறார் நீதிக்குழுமம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த முத்துராமலிங்கம் (60) என்பவர் அப்பகுதியில் மாவு மில் நடத்தி வருகிறார். கடந்த 02-06-2024 அன்று அவர் ஆசாரிமார் தெரு வழியாகத் தனது மில்லுக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாகச் சென்ற ஒரு சிறுவன் உள்ளிட்ட மூன்று பேர் சாலையை மறித்தபடி நின்றுள்ளனர். 

இதனை முத்துராமலிங்கம் தட்டிக்கேட்டு அவர்களைச் சத்தமிட்டுவிட்டு மில்லுக்குச் சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த பட்டு மகன் பாலசுப்பிரமணியன், பரிசுத்தமணி மகன் இம்மானுவேல் மற்றும் ஒரு இளஞ்சிறார் ஆகிய மூவரும் சேர்ந்து முத்துராமலிங்கத்தை அரிவாளால் வெட்டியுள்ளனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட இளஞ்சிறார் நீதிக்குழுமத்தில் நடைபெற்றது. இளஞ்சிறார் நீதிக்குழும முதன்மை நடுவர் எஸ். பாக்கியராஜ் மற்றும் உறுப்பினர் சரவணன் ஆகியோர் முன்னிலையில் விசாரணை முடிந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட சிறுவனுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்த வழக்கில் அரசுத் தரப்பில் உதவி அரசு வழக்கறிஞர் முருகபெருமாள் ஆஜராகி வாதாடினார். தண்டனை விதிக்கப்பட்ட சிறுவன், பலத்த பாதுகாப்புடன் செங்கல்பட்டில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இவ்வழக்கில் தொடர்புடைய மற்ற இருவர் மீதான விசாரணை நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital



Thoothukudi Business Directory