» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி பள்ளி வகுப்பறையே வங்கியாக மாறியது : மாணவர்கள் உற்சாகம்!
வெள்ளி 27, பிப்ரவரி 2026 3:22:25 PM (IST)

மாணவர்களிடையே வங்கிச் செயல்பாடுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், தூத்துக்குடி செயின்ட் சேவியர்ஸ் பள்ளியில் சிறப்பான வங்கிப் பணி பயிற்சி முகாம் நடைபெற்றது.
இப்பயிற்சியில் வங்கியில் பணம் செலுத்துதல், பணம் எடுத்தல் மற்றும் அதற்கான படிவங்களை பிழையின்றி நிரப்புவது குறித்து மாணவர்களுக்கு நேரடிப் பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும், புதிய வங்கி கணக்கு தொடங்குவதற்கான நடைமுறைகள் குறித்தும் விரிவாக விளக்கப்பட்டது.
இந்த பயிற்சிக்காக ஒரு வகுப்பறை அப்படியே மாதிரி வங்கி போல மாற்றப்பட்டிருந்தது. இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் மேலாளர், காசாளர் என அனைத்துப் பொறுப்புகளையும் மாணவர்களே ஏற்று நடத்தினர். வங்கியின் அன்றாட அலுவல் பணிகளை மாணவர்கள் கையாண்ட விதம் அனைவரையும் கவர்ந்தது.
நிஜ வங்கிச் சூழலை நேரில் கண்டது போன்ற உணர்வை ஏற்படுத்திய இந்த முன்னெடுப்பை ஆசிரியர்கள், சக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என அனைத்துத் தரப்பினரும் வெகுவாகப் பாராட்டினர். இந்த சிறப்பான ஏற்பாடுகளை பள்ளியின் தாளாளர் மற்றும் தலைமையாசிரியர் வழிகாட்டுதலில், ஆசிரியர் லூர்துசாமி செய்திருந்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மனைவியைக் கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை: தூத்துக்குடி மகிளா நீதிமன்றம் தீர்ப்பு
வெள்ளி 27, பிப்ரவரி 2026 8:49:53 PM (IST)

வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு 3-வது நாளாக காத்திருப்பு போராட்டம்!
வெள்ளி 27, பிப்ரவரி 2026 8:46:46 PM (IST)

மாவு மில் உரிமையாளரை வெட்டிய சிறுவனுக்கு ஓராண்டு சிறை தண்டனை!
வெள்ளி 27, பிப்ரவரி 2026 8:41:23 PM (IST)

தூத்துக்குடி வணிக வளாகத்தில் டாஸ்மாக் கடை ஒதுக்கீடு : தீர்மானத்தை ரத்து செய்ய பாஜக கோரிக்கை!
வெள்ளி 27, பிப்ரவரி 2026 5:18:30 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் மீண்டும் போட்டியிட அமைச்சர் கீதா ஜீவன் விருப்ப மனு!
வெள்ளி 27, பிப்ரவரி 2026 4:34:40 PM (IST)

தூத்துக்குடியில் ஓபிஎஸ் அணியினர் கொந்தளிப்பு - அலுவலகத்தில் படங்களை அகற்றிய மாவட்ட செயலாளர்!
வெள்ளி 27, பிப்ரவரி 2026 12:17:13 PM (IST)









