» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு 3-வது நாளாக காத்திருப்பு போராட்டம்!

வெள்ளி 27, பிப்ரவரி 2026 8:46:46 PM (IST)



தூத்துக்குடியில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு (FERA) சார்பில் 3-வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. 

வருவாய்த்துறை, பேரிடர் மேலாண்மைத் துறை மற்றும் நில அளவைத் துறையில் பணிபுரியும் அலுவலர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு (FERA) சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று 3-வது நாளாகக் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

வருவாய்த்துறை, பேரிடர் மேலாண்மை மற்றும் நில அளவைத் துறைகளில் பணியாற்றும் அனைத்து நிலை அலுவலர்களின் உயிர் மற்றும் உடைமைகளைப் பாதுகாக்கவும், பணி நேரத்தில் தாக்குதல் நடத்தும் குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை பெற்றுத் தரவும் ஏதுவாக "சிறப்பு பணி பாதுகாப்பு சட்டத்தை" அரசு உடனடியாக இயற்ற வேண்டும்.

பணிச்சுமையைக் கருத்தில் கொண்டு, அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்கிட வேண்டும். கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி நடைபெற்ற இப்போராட்டத்தில் மாவட்ட தலைவரும் வட்டாட்சியருமான சுவாமிநாதன் தலைமையில் 80 பெண்கள் உட்பட சுமார் 150-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தைத் தொடரப்போவதாகச் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital






Thoothukudi Business Directory