» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

20 ஆண்டுகாலப் புறக்கணிப்பு: அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் ஏழுமலையான் நகர் மக்கள்!

வெள்ளி 27, பிப்ரவரி 2026 11:24:34 AM (IST)



தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட ஏழுமலையான் நகர் பகுதியில், கடந்த 20 ஆண்டுகளாக அடிப்படை வசதிகளை அதிகாரிகள் முழுமையாகப் புறக்கணித்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில், சிப்காட் வளாகத்திற்கு எதிரே அமைந்துள்ள ஏழுமலையான் நகர், மாநகராட்சியின் 15-வது வார்டுக்கு உட்பட்டது. சுமார் 25 ஆண்டுகளுக்கு முன் உருவான இந்தப் பகுதியில், தற்போது 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

கடந்த 2004-ம் ஆண்டு அரசு சார்பில் 10,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டது. ஆனால், அதில் வெறும் ஒரு மாதம் மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு கடந்த 20 ஆண்டுகளாக, இப்பகுதி மக்கள் குடிநீரை விலைக்கு வாங்கியே பயன்படுத்தி வருகின்றனர்.

முறையான சாலை வசதி, தெருவிளக்குகள் மற்றும் கழிவுநீர் வடிகால் போன்ற எந்தவொரு அடிப்படைத் தேவைகளும் இன்றி அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

மனுக்களைப் பெற்றுக்கொள்ளும் அதிகாரிகள், அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்ற முன்வருவதில்லை. வரிக் கட்டணங்களை முறையாகச் செலுத்தியும் அடிப்படை வசதிகளுக்காகப் போராடும் நிலையில் நாங்கள் உள்ளோம்," என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

எனவே, மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இப்பகுதியில் நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதிய சாலைகள் அமைப்பது மற்றும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவது போன்ற பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்பதே ஒட்டுமொத்தப் பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital



Thoothukudi Business Directory